பி.எம்.இந்தியா
வருமான வரித் தொடர்பான இரட்டை வரிவிதிப்பைத் தவிர்க்கவும் நிதி ஏய்ப்பைத் தவிர்க்கவும் இந்தியாவுக்கும் தஜிகிஸ்தானுக்கும் இடையே ஏற்பட்ட உடன்பாட்டை திருத்தும் ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.
இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும்போது இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத்தின் கீழ்த் தகவல்களை இதர சட்ட அமலாக்க அமைப்புகளுடன் வரி அற்ற பயன்களுக்காக பகிர்ந்துகொள்ள வகை செய்கிறது.