பி.எம்.இந்தியா
மேதகு அதிபர்களே,
உலக வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள தேக்கநிலை கவலையளிக்கக் கூடியதாக உள்ளது. தற்போதுள்ள உலகப் பொருளாதாரச் சூழலில் இந்த தேக்கநிலை நீங்கி வர்த்தகம் முன்னேற்றம் அடைய வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. உலகப் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு எடுக்கப்படும் முயற்சிகள் இந்த வர்த்தகம் முன்னேற உதவும்
உலகப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு வெளிப்படையான, பாரபட்சமில்லாத, விதிகளின் அடிப்படையிலான வர்த்தக முறை உதவும்.
டோகா வளர்ச்சி மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகள் அதன் இலக்கை அடைவது மிக அவசியம். பாலி மாநாட்டின் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட வேண்டும். நைரோபியில் டிசம்பரில் நடக்க உள்ள கூட்டம் வெற்றிகரமாக அமையும் என்று நம்புகிறோம்.
பிராந்திய வர்த்தக ஒப்பந்தங்கள் உலக வர்த்தக முறையில் விரிசல் ஏற்படுத்தாமல், பன்முக, தாராளமயமாக்கப்பட்ட வர்த்தக முறைக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்.
சிறு மற்றும் நடுத்தர தொழில்களின் பங்கை உலக வர்த்தகத்தில் அதிகரிப்பது, உலக அளவில் வேலைவாய்ப்பை அதிகரிக்கும்
சமமான மற்றும் நிலையான உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு, தொழிலாளர்கள் மற்றும் திறன்களை நகர்த்துதல் அவசியமாகும்.
எரிசக்தி தொடர்பாக கூற வேண்டுமானால், அதற்கு மூன்று அடிப்படையான சவால்கள் உள்ளன. எரிசக்தியிலிருந்து மின்சக்தியாக வளரும் நாடுகளில் மாற்றம் அடைவது ; மின்சக்தியே இல்லாமல் வளரும் நாடுகளில் உள்ள பல மில்லியன் மக்களின் தேவையை பூர்த்தி செய்வது ; சுத்தமான மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் பயன்பாட்டை அதிகரிப்பது.
எரிசக்தி, சூழலியல் மற்றும் பொருளாதாரம் ஆகியவை பின்னிப் பிணைந்தவை.
இதன் காரணமாகத்தான் இந்தியா அதன் எரிசக்தி தேவைகளை ஒரு நிலையான முறையில் சந்திக்க உத்தேசித்துள்ளது.
2022ம் ஆண்டுக்குள் 175 ஜிகா வாட் மறுசுழற்சி எரிசக்தியை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளோம். படிம எரிபொருள் மற்றும் நிலக்கரியின் மீதான மானியங்களை படிப்படியாக குறைக்க உத்தேசித்துள்ளோம். ஒரு சுத்தமான நிலக்கரி தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகிறோம். அணு சக்தி தொடர்பான நம்பிக்கை தரும் திட்டங்களை வைத்துள்ளோம். 2030 ல் எங்களது எரிபொருள் தேவையில் 40 சதவிகிதத்தை படிமங்கள் அல்லாத எரிபொருளாக மாற்றுவதை இலக்காக வைத்தள்ளோம்.
சர்வதேச ஒத்துழைப்பும், உதவியும் நாங்கள் எங்கள் இலக்கை அடைவதற்கு உதவும்.
ஜி20 நாடுகளாகிய நாம், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
• மறுசுழற்சி எரிசக்தியில் ஆராய்ச்சி மேற்கொண்டு, அதன் செலவை குறைக்கவும், அது அனைவருக்கும் பயன்படுவதாக ஆக்கவும் வேண்டும்.
• சுத்தமான எரிசக்திக்கு மாறுவதற்காக, தொழில்நுட்ப மாற்றங்களும், நிதி உதவியும் செய்யப்பட வேண்டும்.
• சுத்தமான நிலக்கரி பயன்பாடு தொழில்நுட்பத்தையும், நிலக்கரியை வாயுவாக்கவுமான ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும்.
• பெருக்க முடியாத அணு சக்தி தொழில்நுட்பத்தை வளர்ப்பது.
• எரிசக்தியின் தன்மையை அதிகரித்து, அதன் பயன்பாட்டை மட்டுப்படுத்துவது.
• ஒருங்கிணைந்த உலக வாயு சந்தையை உருவாக்குவது.
• உலகில் வளர்ந்து வரும் பொருளாதாரங்களுக்கு அதிக வாய்ப்பு அளித்து உலகின் எரிசக்தி நிர்வாகத்தில் பங்களிப்பது.
இந்த நடவடிக்கைகள் நமது எரிசக்தித் தேவைகளை பூர்த்தி செய்து, தட்பவெட்ப மாற்றத்திற்கு எதிராக போராடி, மிகப்பெரிய பொருளாதார வாய்ப்பையும் ஏற்படுத்தும்.
Earlier today, PM @narendramodi spoke at the G-20 Working Session. He spoke on the global economy and enhancing resilience.
— PMO India (@PMOIndia) November 16, 2015
I commend the G 20 for its successful efforts to build a more resilient and open global financial system: PM @narendramodi
— PMO India (@PMOIndia) November 16, 2015
In India, Government and the Central Bank, are taking steps to further strengthen the financial and banking sector: PM @narendramodi
— PMO India (@PMOIndia) November 16, 2015
Cyber security is important for the protection of the banking infrastructure: PM @narendramodi
— PMO India (@PMOIndia) November 16, 2015
At working lunch on trade & energy, talked about how energy, ecology & economy are deeply integrated. https://t.co/sPQZpenexO @G20Turkey2015
— Narendra Modi (@narendramodi) November 16, 2015