பி.எம்.இந்தியா
வர்த்தக தீர்வு ஒத்துழைப்பு குறித்து இந்தியா மற்றும் கொரியா இடையே சமீபத்தில் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை செயல்பாட்டிற்குப் பிந்தைய ஒப்புதல் அளித்துள்ளது.
கொரிய அதிபர் இந்தியாவிற்கு ஜூலை, 2018ல் அரசு முறை பயணமாக இந்தியாவிற்கு வருகை தந்தபோது இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
இறக்குமதிமிகு குவிப்பு தவிர்ப்பு மானியம் மற்றும் எதிர் ஈடுசெய்தல் மற்றும் நலம்காப்பு நடவடிக்கைகள் போன்ற இருதரப்பின் வரத்தக உறவினை மேம்படுத்த தேவையான வரத்தக தீர்வுகளை இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஊக்குவிக்கும்.
************