Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

வர்த்தக நீதிமன்றங்கள், உயர்நீதிமன்றங்களின் வர்த்தக பிரிவு மற்றும் வர்த்தக மேல்முறையீட்டு பிரிவு (திருத்த) மசோதா 2018-க்கு அமைச்சரவை ஒப்புதல்


பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம் வர்த்தக நீதிமன்றங்கள், உயர்நீதிமன்றங்களின் வர்த்தக பிரிவு மற்றும் வர்த்தக மேல்முறையீட்டு பிரிவு (திருத்த) மசோதா 2018-ஐ நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்துவதற்கு தனது ஒப்புதலை அளித்தது.

கீழ்க்காணும் நோக்கங்களை அடைய இந்த மசோதா விரும்புகிறது:

  • வர்த்தக விவகாரத்திற்கான குறிப்பிட்ட மதிப்பை தற்போதுள்ள ஒரு கோடியில் இருந்து 3 லட்சத்திற்கு இந்த மசோதா கொண்டு வருகிறது. எனவே வர்த்தக விவகாரங்களுக்கான நியாயமான மதிப்பை வர்த்தக நீதிமன்றங்கள் முடிவு செய்யலாம். இது குறைந்த மதிப்பு கொண்ட வர்த்தக விவகாரங்களில் தீர்வு காண்பதற்கு எடுத்துக் கொள்ளும் நேரத்தை (தற்போது 1445 நாட்கள்) குறைத்து அதன் மூலம் எளிதாக வர்த்தகம் செய்வதற்கான தரவரிசையில் இந்தியாவின் நிலையை மேலும் மேம்படுத்தும்.
  • சம்பந்தப்பட்ட உயர்நீதிமன்றங்களின் சாதாரண அசல் சிவில் வரையறைக்கு உட்பட்ட அதாவது சென்னை, தில்லி, கொல்கத்தா, மும்பை மற்றும் இமாச்சல பிரதேச மாநிலம் ஆகியவற்றில் மாவட்ட நீதிபதி மட்டத்தில் வர்த்தக நீதிமன்றங்களை உருவாக்க இந்த திருத்தம் வகை செய்கிறது. இந்த பிரதேசங்களின் மாநில அரசுகள் மாவட்ட அளவில் விசாரிக்கப்படுவதற்கான வர்த்தக வழக்குகளின் மதிப்பை குறிப்பிட்டு அறிவிக்கைகளை வெளியிடலாம். இவை மூன்று லட்சத்திற்கு குறைவாகவோ அல்லது மாவட்ட நீதிமன்றத்தின் மதிப்புக்கு மேலாகவோ இருக்கக்கூடாது. சாதாரண அசல் வரம்பு அல்லாத உயர்நீதிமன்ற வரம்புக்கு உட்பட்ட பகுதிகளில் மாவட்ட நீதிபதி மட்டத்திற்கு கீழ் உள்ள வர்த்தக நீதிமன்றங்களால் முடிவு செய்யப்படும் வர்த்தக வழக்குகள் வர்த்தக மேல்முறையீட்டு நீதிமன்றங்கள் முறையில் மாவட்ட நீதிபதி அளவில் விசாரிக்கப்படும்.
  • அவசரமற்ற, இடைக்கால நிவாரணம் தேவைப்படாத வழக்குகளுக்கு நிறுவனத்திற்கு முந்தைய மத்தியஸ்த நடைமுறை அறிமுகம் செய்யப்படும். இது சம்பந்தப்பட்டவர்கள் நீதிமன்றத்திற்கு வெளியே சட்ட சேவைகள் ஆணைய சட்டம் 1987ன் கீழ் அமைக்கப்பட்ட ஆணையங்கள் மூலம் தங்களது வர்த்தக விவகாரங்களுக்கு தீர்வு காணமுடியும். இது வர்த்தக விவகாரங்களில் தீர்வுகாண்பதில் முதலீட்டாளரின் நம்பிக்கையை உறுதிசெய்யவும் உதவும்.
  • 21ஏ என்ற புதிய பகுதி இணைக்கப்பட்டிருப்பது பி.ஐ.எம்.முக்கான விதிகள் மற்றும் நடைமுறைகளை மத்திய அரசு உருவாக்குவதை சாத்தியமாக்கும்.
  • சட்டத்தில் தற்போதுள்ள விதிகளுக்கு ஏற்ப வர்த்தக விவகாரங்களை விசாரித்துவரும் நீதி அமைப்பை பாதிக்காத வகையில் இந்த திருத்தம் எதிர்கால தாக்கங்களை அளிக்கும்.

பின்னணி:

விரைவான பொருளாதார வளர்ச்சி காரணமாக வர்த்தக செயல்பாடுகளில் குறிப்பிடதக்க  உயர்வு காணப்படுவதுடன் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வர்த்தக விவகாரங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அந்நிய நேரடி முதலீடுகள் அதிகரித்திருப்பதும் வெளிநாட்டு வர்த்தக பரிவர்த்தனைகளும் வர்த்தக விவகாரங்கள் குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகரிக்க செய்துள்ளன.

இந்த பிரச்சனையில் வர்த்தக விவகாரங்களுக்கு விரைவில் தீர்வு காணவும் சுதந்திரமான இந்திய நீதித்துறை அமைப்பு குறித்து அந்நிய முதலீட்டாளர்களிடையே நேர்மறையான எண்ணத்தை உருவாக்கவும் வர்த்தக நீதிமன்றங்கள், உயர்நீதிமன்றங்களின் வர்த்தக பிரிவு மற்றும் வர்த்தக மேல்முறையீட்டு பிரிவுகள் சட்டம் 2015 கொண்டு வரப்பட்டு அசல் சாதாரண சிவில் வரம்பு கொண்ட உயர்நீதிமன்றங்கள் தவிர இதர பிராந்தியங்களில் மாவட்ட அளவில் வர்த்தக நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன. மும்பை, தில்லி, கொல்கத்தா, சென்னை மற்றும் இமாச்சல பிரதேம் ஆகிய இந்த ஐந்து உயர்நீதிமன்றங்கள் சாதாரண அசல் சிவில் வரம்பினை மும்பை, தில்லி, கொல்கத்தா, சென்னை மற்றும் இமாச்சல பிரதேசம் ஆகிய பிரதேசங்களில் நடைமுறைப்படுத்துகிறது. இந்த பிரதேசங்களில் இந்த உயர்நீதிமன்றங்கள் பகுதி மூன்றில் பிரிவு (1)ன் படி மாவட்ட அளவில் வர்த்தக நீதிமன்றங்கள் அமைக்கப்படாமல் இந்த உயர்நீதிமன்றங்களில் வர்த்தக பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன. வர்த்தக நீதிமன்றங்கள் அல்லது உயர்நீதிமன்றங்களின் வர்த்தக பிரிவுகள் விசாரிப்பதற்கு வர்த்தக விவகாரங்களுக்கான மதிப்பு தற்போது ஒரு கோடி ரூபாயாக உள்ளது.

உலக வங்கியின் எளிதாக வர்த்தகம் செய்வதற்கான குறியீடு ஒரு நாட்டில் வர்த்தக விவகாரங்கள் தீர்வு காணப்படுவதையும் கருத்தில் கொள்கிறது. ஒரு வர்த்தகத்தில் முதலீடு செய்யவும் வர்த்தகம் செய்யவும் இது முதலீட்டாளர்கள் முடிவு செய்ய வகை செய்கிறது. இந்தக் குறியீடு கடந்த 2002ம் ஆண்டு உலக வங்கி குழுமத்தால் உருவாக்கப்பட்டது. உலகில் உள்ள அனைத்து நாடுகளையும் இது மதிப்பீடு செய்கிறது. எளிதாக வர்த்தகம் செய்வதில் உயர் தரவரிசை என்பது வரன்முறை சூழல் வர்த்தகத்தை தொடங்கி நடத்த இணக்கமாக உள்ளது என்று பொருள். 2017 அக்டோபர் 31ம் தேதி உலக வங்கி சமீபத்திய தரவரிசை பட்டியலை வெளியிட்டது. இந்த பட்டியலில் முன்னணியில் உள்ள முன்னேற்றம் கண்ட 10 நாடுகளில் ஒன்றாக உள்ள இந்தியா 30 இடங்கள் முன்னேறி உள்ளது. 190 நாடுகளை கொண்ட இதில் இந்தியா 100வது இடத்தில் உள்ளது. சிறந்த நடைமுறைகளை இந்தியா விரைவாக கடைப்பிடிக்கிறது என்பதை இது எடுத்துக் காட்டுகிறது.