Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

வர்த்தக வசதிக்கான ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


புதுதில்லி, பிப்ரவரி 17, 2016
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, உலக வர்த்தக மையத்தின் வர்த்தக வசதிக்கான ஒப்பந்தம், வர்த்தக வசதிக்கான விதிகளின் பின்னேற்பு, வர்த்தக வசதிக்கான தேசிய குழு உருவாக்கம் ஆகியவற்றுக்கு பின்னேற்பு அளித்தது.

வர்த்தக வசதி ஒப்பந்தம், பொருட்களின் வேகமான போக்குவரத்து, விடுவிப்பு, தடையில்லா போக்குவரத்து ஆகியவற்றுக்கு வசதி செய்து தரும். பொருட்கள் போக்குவரத்து தொடர்பாக சுங்கம் மற்றும் இதர துறைகளில் உள்ள தடைகளை நீக்கி, ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்கு இந்த ஒப்பந்தம் உதவும். இந்தியாவின் “எளிதாக தொழில் நடத்துதல்” என்ற திட்டத்தின் அடிப்படையில் இந்த முன்னேற்பாடுகள் செய்யப்படுகின்றன.

உலக வர்த்தக மையத்தின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்தபடி, இந்த வர்த்தக வசதி ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும்.

இந்த ஒப்பந்தத்தை செயல்படுத்துவதற்கும், உள்நாட்டு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும், மத்திய வருவாய்த் துறைச் செயலர் மற்றும் மத்திய வர்த்தகத் துறை செயலர் ஆகியோர் தலைமையில் ஒரு குழு ஏற்படுத்தப்படும்.


***