Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

வளர்ச்சியடைந்த இந்தியாவை வடிவமைக்கும் தொழில்துறை, தொழில்முனைவு, உற்பத்தி ஆகியவற்றுக்கான சூழல் குறித்து எடுத்துரைக்கும் கட்டுரையைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்


பிரதமரின் 25 ஆண்டுகால தலைமைத்துவம் தொழில்துறை, தொழில்முனைவு, உற்பத்தி ஆகியவற்றுக்கான இந்தியாவின் சூழலை எவ்வாறு வலுப்படுத்தியுள்ளது என்பது குறித்து திரு உதய் கோட்டக் எழுதியுள்ள கட்டுரையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

உற்பத்தி, செமிகண்டக்டர், பாதுகாப்பு மற்றும் ஆழ் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்கள், உள்கட்டமைப்பு, மேம்பாடு, புதிய முன்முயற்சிகள் ஆகியவை எவ்வாறு புதிய தொழில்திறன்களை கட்டமைக்கின்றன என்பது குறித்தும் வளர்ச்சியடைந்த இந்தியா முன்முயற்சியானது இந்திய வணிகங்கள் விரிவுபடுத்தவும் உலக அளவில் போட்டியிடவும் ஊக்கமளித்து வருவது குறித்தும் திரு கோட்டக் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:

“பிரதமர் திரு நரேந்திர மோடியின் 25 ஆண்டுகால தலைமைத்துவம், தொழில்துறை, தொழில்முனைவு, உற்பத்தித் துறை ஆகியவற்றுக்கான இந்தியாவின் சூழலை வலுப்படுத்த உதவியுள்ளதாக திரு உதய் கோட்டக் எழுதியுள்ளார். உற்பத்தி, செமிகண்டக்டர்கள், பாதுகாப்பு மற்றும் ஆழ் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்கள், உள்கட்டமைப்பு, புதிய முன்முயற்சிகள் ஆகியவை புதிய தொழில் திறன்களை உருவாக்குகின்றன.

இந்திய வணிகங்கள் வளர்ச்சியடைவதற்கும் உலகளவில் போட்டியிடுவதற்கும் வளர்ச்சியடைந்த இந்தியா முன்முயற்சி ஊக்கமளிக்கிறது. இது இந்தியாவின் அடுத்தகட்ட தொழில்வளர்ச்சி குறித்த சிந்தனைமிக்க கண்ணோட்டமாகும்”.

***

(Release ID: 2319963)

TV/IR/SM/GS