Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

வாத்ராத்தில் உள்ள காய்கறிகளுக்கான உயர்திறன் மையத்திற்கு பிரதமர் திரு.மோடி மற்றும் இஸ்ரேலிய பிரதமர் திரு.நேதன்யாஹூ விஜயம்


குஜராத், சபர்காந்தா மாவட்டம், வாத்ராத்தில் உள்ள காய்கறிகளுக்கான உயர்திறன் மையத்திற்கு பிரதமர் திரு.மோடி மற்றும் இஸ்ரேலிய பிரதமர் திரு.நேதன்யாஹூ ஆகியோர் இன்று விஜயம் செய்தனர்.

மையத்தின் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து அவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. மேலும் அவர்கள் காணொலி காட்சி மூலம், கட்ச் மாவட்டம், குக்காமாவில் உள்ள பேரிச்சை மரங்களுக்கான உயர்திறன் மையத்தை திறந்து வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் திரு. மோடி அவர்கள், விவசாயத் துறையை மையமாக வைத்து எவ்வறு ஒரு நாடு மாற்றமடைய முடியும் என்பதற்கான வழியை இஸ்ரேல் காட்டியுள்ளதாக கூறினார். விவசாயத் துறையில் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது முக்கியமானதாகும் என்றார் அவர். 2022-ம் ஆண்டிற்குள் விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக உயர்த்திடுவதற்கு இந்தியா எவ்வாறு உழைத்து வருகின்றது என்பதை அவர் விளக்கினார். பாசனம் மற்றும் விவசாய கண்டுபிடிப்பு முறைகளில் கவனம் செலுத்துவது அத்தியாவசியமாகும் என்றார் அவர்.

***