Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

வாரணாசியில் நிதி உள்ளடக்க திட்டங்கள் – பிரதமர் துவக்கி வைத்தார்

• ரிக்ஷாக்களையும், மின்-ரிக்ஷாக்களையும் வழங்கினார்

• பயனாளிகளுக்கு வங்கிக் கணக்கு, ரூபே அட்டைகள்

• பயனாளிகளுடன் பிரதமர் உரையாடினார்

வாரணாசியில் பிரதமர் திரு நரேந்திர மோடி முக்கிய நிதி உள்ளடக்க திட்டங்களை இன்று துவக்கி வைத்தார். மொத்தமாக 101 மின் ரிக்க்ஷாகளும் 501 ரிக்க்ஷாகளும் மற்றும் தள்ளு வண்டிகளும் இத்திட்டத்தின் கீழ் விநியோகம் செய்யப்பட்டது. பிரதமர் மக்கள் நிதி திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வங்கி கணக்குகளும் ரூபே அட்டைகளும் வழங்கப்படும். மின் ரிக்க்ஷாக்களில் மின்னணு இயந்தரங்களான ஜி.பி.ஆர்.ஸ் மற்றும் புகைப்படக் கருவிகள் பொருத்தப்பட்டு இருக்கும்.

சிட்பி, ஐ.டி.பி.ஐ வங்கி, யூகோ வங்கி மற்றும் அமெரிக்கன் இந்திய நிறுவனம் போன்ற நிதி நிறுவனங்களுடன் இந்த்த் திட்டம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்புகளின் மூத்த அதிகாரிகள் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர்.

வாரணாசி மக்களின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை கொண்டுவரும் ஆரம்பத்தின் குறியீடாக இத்திட்டம் விளங்கும் என்று பிரதமர் தெரிவித்தார். வறுமை ஒழிப்பு குறித்து பல்வேறு விஷயங்கள் கூறப்பட்டிருந்தாலும் அதற்கான முயற்சிகள் பல ஆண்டு காலமாக தேவைக்கேற்ற முடிவுகளை தரவில்லை. வறுமையை ஒழிக்க இம்முயற்சியின் வேகத்தை அதிகரித்து பயன்பெற வேண்டும். வருங்கால சந்ததியினரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த ஏழைகள் கடினமாக உழைக்க தயாராக உள்ளனர் என்று பிரதமர் கூறினார். இதையொட்டி ஏழைகள் தன்நிறைவு பெறும் வகையில் மத்திய அரசு திறன் மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது என்றும் பிரதமர் தெரிவித்தார்.

ரிக்க்ஷாகள் மற்றும் தள்ளு வண்டி பெற்ற பயனாளிகளுடன் பிரதமர் உரையாடினார். குழந்தைகளுக்கு சிறந்த கல்வி, தள்ளுவண்டி உதவியால் அதிக விற்பனை செய்து வருமானம் ஈட்டுவது போன்ற பல்வேறு கனவுகளை அவர் அங்கு கூடியிருந்த மக்களிடம் பகிர்ந்து கொண்டார்.

ரக்க்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு வாரணாசியில் இருந்து அதிக அளவில் தான் பெற்ற ராக்கி கயிறுகள் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், வாரணாசியில் உள்ள தாய்மார்களையும் சகோதரிகளையும் அவர்களின் ஆசீர்வாதங்களுக்காகவும் வாழ்த்துகளுக்காகவும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

•••••