Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

வாரணாசியில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கிவைத்தார்.

வாரணாசியில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கிவைத்தார்.


வாரணாசியில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கிவைத்தார்.

இதில், 765/400 கே.வி. ஜி.ஐ.எஸ். திறன் கொண்ட வாரணாசி துணை மின் நிலையம் அர்ப்பணிப்பு; வாரணாசி நகர எரிவாயு விநியோகத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுதல்; வாரணாசி தபால் பிராந்தியம் தொடங்கிவைப்பு; டீசல் ரயில் என்ஜின் தயாரிப்புப் பகுதி விரிவாக்கத் திட்டம் (முதல் கட்டம்);

இரண்டாவது பாதை மற்றும் அலகாபாத்-வாரணாசி ரயில் பாதையை மின்மயமாக்குதல் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல்; ராஜாதலாப் ரயில் நிலையத்தில் அழுகக் கூடிய பொருட்களை எடுத்துச் செல்வதற்கான சரக்கு முனையத்தை அமைப்பது உள்ளிட்ட பணிகளை பிரதமர் தொடங்கிவைத்தார்.

செல்வமகள் சேமிப்புத் திட்டத்தின் பயனாளிகள் சிலரை பிரதமர் பாராட்டினார். இலவச எரிவாயு இணைப்புத் (உஜ்வாலா) திட்டத்தின் கீழ் எரிவாயு இணைப்புகளையும் வழங்கினார். வாரணாசி நகரம் குறித்த நினைவு தபால் தலையை அவர் வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், தீபாவளியையொட்டி, ராணுவ வீரர்களுக்கு தங்களது செய்திகளை அனுப்பிவைக்குமாறு பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.

மேலும், திட்டங்களை குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருவதாக அவர் தெரிவித்தார். அடிக்கல் நாட்டுவதை உறுதிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், உரிய நேரத்தில் திட்டங்களை தொடங்கிவைக்க வேண்டும் என்பதிலும் உறுதியாக இருப்பதாக பிரதமர் தெரிவித்தார். திட்டங்களை உரிய வழியில் செயல்படுத்துவதோடு, அதன் பயன்கள் மக்களுக்கு சென்றுசேர வேண்டும் என்பதே அரசின் உண்மையான இலக்கு என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

அரசு மேற்கொண்டு வரும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற திட்டங்கள் குறித்தும் பிரதமர் பேசினார். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்குவகித்துவரும் இந்திய ரயில்வேயை மேம்படுத்துவதற்கான அரசின் புதிய திட்டங்கள் குறித்தும் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.