Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

வாராணசியில் கட்டுமானத்தில் உள்ள மேம்பாலம் இடிந்த்தன் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து பிரதமர் வருத்தம்


வாராணசியில் கட்டுமானத்தில் உள்ள மேம்பாலம் ஒன்று இடிந்து விழுந்ததன் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளார்.

“வாராணசியில் கட்டுமானத்தில் உள்ள மேம்பாலம் ஒன்று இடிந்து விழுந்ததன் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து ஆழ்ந்த வருத்தமடைகிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு இயன்ற உதவிகளை அளிக்கக் கேட்டுக் கொண்டுள்ளேன்.

வாராணசியில் கட்டுமானத்தில் உள்ள மேம்பாலம் இடிந்து விழுந்தபிறகு உள்ள சூழ்நிலை குறித்து உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்களுடனும் பேசியுள்ளேன். அங்கு நிலவும் சூழ்நிலை குறித்து உத்தரப் பிரதேச அரசு தீவிரமாக கண்காணித்து வருவதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை அளித்து வருகிறது” என பிரதமர் தெரிவித்துள்ளார்.