Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

வார்தா புயல் பாதித்த மக்களின் பாதுகாப்புக்கு பிரதமரின் பிரார்த்தனை


வார்தா புயல் காரணமாக ஏற்பட்ட மோசமான பருவநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக பிரார்த்தனை செய்வதாக பிரதமர் திரு.நரேந்திர மோடி தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மத்திய அரசு உள்ளாட்சி நிர்வாகங்கள் மற்றும் ராணுவத்தினிருடன் பாதிக்கப்பட்ட மக்களின் உயிர் மற்றும் உடமைகள் பாதுகாப்புக்காக மத்திய அரசு நெருங்கி ஒத்துழைத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“வார்தா புயல் காரணமாக ஏற்பட்டுள்ள மோசமான பருவநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்கள் பாதுகாப்புக்காக எனது பிரார்த்தனைகள். பத்திரமாக இருங்கள்.

மத்திய அரசு @ndmaindia என்ற வலைதளத்தின் மூலம் உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் ராணுவத்தினிடருடன் மக்களின் உயிர் மற்றும் உடமைகளின் பாதுகாப்பிற்காக நெருங்கி பணியாற்றி வருகிறது” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

***