Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

விடாமுயற்சி, மன உறுதியின் சக்தியை எடுத்துரைக்கும் சமஸ்கிருத சுபாஷிதத்தைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்


தொடர் முயற்சி, பொறுமை, நிலையான மன உறுதி ஆகியவற்றின் மூலம் மிகப்பெரிய இலக்குகளைக் கூட அடைய முடியும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். தற்போது நாட்டு மக்கள் இந்த உணர்வால் வழிநடத்தப்பட்டு, இந்தியாவைப் புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

இது குறித்த சமஸ்கிருத சுபாஷிதம் ஒன்றைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்.

ஒருவர் ஒரு குறிப்பிட்ட இலக்கை அடையப் பிரார்த்தனை செய்தாலோ அல்லது விரும்பினாலோ, அதை அடைவதற்காகத் தொடர்ச்சியான, திட்டமிட்ட முயற்சிகளை மேற்கொண்டு, பாதியில் அதைக்  கைவிட்டுத் தன் பாதையிலிருந்து பின்வாங்காதிருந்தால், சந்தேகமின்றி அந்த இலக்கை அடைவார் என்று சுபாஷிதம் தெரிவிக்கிறது.

***

(Release ID: 2265686)

SS/SMB/KR