பி.எம்.இந்தியா
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், விண்வெளியை அமைதி நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவது மற்றும் ஆய்வு செய்வதில் ஒத்துழைப்பதற்கு இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், பொலிவிய விண்வெளி முகமை இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்குப் பின்னேற்பு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்தியக் குடியரசுத் தலைவரின் பொலிவியா பயணத்தின்போது, அங்குள்ள சாந்தா க்ரூஸ் டி லா சியராவில். 29.03.2019 அன்று இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ), பொலிவிய விண்வெளி முகமை இடையே இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
விவரங்கள்:
விண்வெளி அறிவியல், தொழில்நுட்பம், புவியின் தொலையுணர்வு உள்ளிட்ட பயன்பாடுகள்; செயற்கைக்கோள் அடிப்படையில் கடற்பாதையை அறிதல்; விண்வெளி அறிவியல் மற்றும் கோள்கள் கண்டறிதல்; விண்கலம், விண்வெளி மற்றும் நிலம் சார்ந்த செயல்பாடுகள்; விண்வெளி தொழில்நுட்பப் பயன்பாடு போன்ற முக்கிய நலன் சார்ந்த துறைகளில் ஒத்துழைக்க இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் வகை
செய்கிறது.
இஸ்ரோ மற்றும் பொலிவிய விண்வெளி முகமையின் உறுப்பினர்களைக் கொண்டு கூட்டுப் பணிக்குழு அமைக்க இது வகை செய்கிறது. இந்தக் குழு குறிப்பிட்ட காலத்தில் ஒப்பந்தத்தை அமல்படுத்துவதற்கான செயல்திட்டத்தை வகுக்கும்.
*******