பி.எம்.இந்தியா
விண்வெளி தொழில்நுட்பத்தின் அடிப்படையில் மேம்பாட்டிற்கும் ஆளுமைக்கும் பயன்படும் வகையில் இயங்கும் கருவிகளையும் செயலிகளையும் பிரபலப்படுத்தும் தேசிய மாநாடு புதுதில்லியில் நடைபெற்றது. இதில் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்து கொண்டார்.
இக்கூட்டத்தில் செயற்கைக்கோள்களைப் பயன்படுத்தும் செயல் முறை விளக்கங்கள் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக உயரதிகாரிகளால் அளிக்கப்பட்டது.
அரசு நிர்வாகத்தில் எல்லாப் பிரிவுகளிலும் விண்வெளி தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவது பற்றியும் புதிய முயற்சிகளை பயன்படுத்த வேண்டியதன் அவசியம் பற்றியும் பிரதமர் இக்கூட்டத்தில் குறிப்பிட்டார். 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு தாம் சென்றிருந்தபோது இது குறித்து வலியுறுத்தியதாகவும் அதன் பின்னர் அரசின் பல துறைகள் விண்வெளி தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது மனநிறைவை அளிப்பதாகவும் அவர் கூறினார்.
மத்திய அரசின் எல்லா அமைச்சகங்களும் 2015 ஆம் ஆண்டு ஏதாவது ஒரு பிரிவில் விண்வெளி தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்று பிரதமர் அப்போது கேட்டுக் கொண்டார்.
விண்வெளி தொழில்நுட்பத்திற்கு செலவிடும் தொகையைப் பற்றி குறிப்பிடுகையில், இந்தியாவில் உள்ள சாதாரண மனிதனும் அவனுக்குத் தேவையானவற்றை முழுமையாக அடையும் வகையிலான குறிக்கோளை நாம் அடைந்தே தீர வேண்டும் என்று இந்திய அறிவியல் விஞ்ஞானி விக்ரம் சாராபாய் கூறியதை பிரதமர் நினைவு கூர்ந்தார். அரசு துறைகள் தங்களுடைய பணிகளில் விண்வெளி தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் மிக அதிக அளவில் ஆர்வம் காட்டுவது குறித்து பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். நம்மிடையே உள்ள ஆதாரங்கள் மற்றும் தகவல்கள் ஆகியவற்றை பயன்படுத்தி செயலாக்குவதில் வெற்றி பெற வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறினார்.
சாதாரண மக்களும் பயன் அடையும் வகையில் விண்வெளி தொழில்நுட்பத்தை எவ்விதமான பிரிவுகளில் பயன்படுத்த முடியும் என்பதை திரு. நரேந்திர மோடி விளக்கிக் கூறினார். மீனவர்களுக்கு அதிக அளவு மீன் கிடைக்கும் இடங்கள், பிரதம மந்திரி கிரிஷி சின்சை யோஜனா திட்டத்தின் கீழ் பாசன வசதிகளுக்கான கட்டமைப்பு வசதிகளை அறிதல், சட்ட விரோதமாக சுரங்கத் தொழிலில் ஈடுபடுவோரை கண்டுபிடித்தல் போன்ற உதாரணங்களை குறிப்பிட்டார்.
நல்லாட்சியை வெளிப்படையாகவும் பொறுப்புள்ளதாகவும் நடத்த இத்தொழில்நுட்பம் மிகவும் சக்தி வாய்ந்த ஊடகமாக திகழ்கிறது என்று திரு. நரேந்திர மோடி கூறினார். விண்வெளி விஞ்ஞானத்திற்கும் சாதாரண மனிதனுக்கும் இடையே எவ்விதமான இடைவெளியும் இருக்கக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
There has always been a question- should a poor nation like India develop a space programme. This question is raised time and again: PM
— PMO India (@PMOIndia) September 7, 2015
Dr. Vikram Sarabhai used to say- we are doing it for the people. We have to think of what will help the people of India: PM @narendramodi
— PMO India (@PMOIndia) September 7, 2015
We should keep thinking about innovation and of doing new things: PM @narendramodi https://t.co/byUefDIIOj
— PMO India (@PMOIndia) September 7, 2015
India has made a mark in space. Our scientists have made India very proud: PM @narendramodi
— PMO India (@PMOIndia) September 7, 2015
How to make maximum use of technology, and ensure it reaches the poorest of the poor...this is our main challenge: PM @narendramodi
— PMO India (@PMOIndia) September 7, 2015
Let us involve the younger generation and take their ideas. The generation is very techno-savvy & we will get lot of ideas: PM @narendramodi
— PMO India (@PMOIndia) September 7, 2015
Space science has an important role in achieving good governance: PM @narendramodi https://t.co/byUefDIIOj
— PMO India (@PMOIndia) September 7, 2015
At today's Meet on Space Technology based Tools & Apps in Governance, was given a series of insightful presentations by officials.
— Narendra Modi (@narendramodi) September 7, 2015
Emphasised on new initiatives in areas of governance using space technology apps & called for seeking ideas from tech-savvy young generation
— NarendraModi(@narendramodi) September 7, 2015
Space science has a vital role in achieving good governance. Our space programme must benefit the common citizens. http://t.co/4jsav0Y5LO
— NarendraModi(@narendramodi) September 7, 2015