பி.எம்.இந்தியா
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், விமானப் போக்குவரத்து அமைப்பில் ஒத்துழைப்புக்காக இந்தியா-ஸ்பெயின் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்தியாவுக்கும், ஸ்பெயினுக்கும் இடையே விமானப் போக்குவரத்து உறவில் முக்கிய மைல்கல்லாக இருக்கும். இதன்மூலம், இரு நாடுகளுக்கும் இடையே மிகப்பெரிய அளவில் வர்த்தகம், முதலீடு, சுற்றுலா மற்றும் கலாச்சார பரிமாற்றங்கள் அதிகரிப்பதற்கு வாய்ப்பு ஏற்படும்.
****