Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

விமான போக்குவரத்திற்கான பிராந்திய இணைப்புத் திட்டமான உடான் திட்டத்தை பிரதமர் சிம்லாவில் இருந்து தொடங்கி வைத்தார்.

விமான போக்குவரத்திற்கான பிராந்திய இணைப்புத் திட்டமான உடான் திட்டத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று சிம்லா, நான்டெட் மற்றும் கடப்பா விமான நிலையங்களில் இருந்து துவக்கி வைத்தார்.

இமாசல பிரதேசம், பிலாஸ்பூரில் ஹைட்ரோ பொறியியல் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டுவதைக் குறிக்கும் விதமாக பிரதமர் மின்னணு இ-கல்வெட்டை திறந்து வைத்தார்.
சிம்லா விமான நிலையத்தில் கூடியிருந்த மக்களிடம் பிரதமர் உரையாற்றினார். அதேபோல், நான்டெட் மற்றும் கடப்பா விமான நிலையங்களில் கூடியிருந்த மக்களிடம் பிரதமர் காணொளி காட்சி மூலம் உரையாற்றினார்.

நடுத்தர மக்களின் வாழ்க்கைத்தரம் மாறிவருகிறது என்றும் அவர்களின் லட்சியங்கள் அதிகரித்து வருகிறது என்றும் பிரதமர் கூறினார். அவர்களுக்கு சரியான வாய்ப்பு கிடைத்தால் அவர்கள் பல அதிசயங்களை நிகழ்த்துவர். உடான் (உதயமாகும் தேசத்தில் சாமான்ய மக்கள்) திட்டத்தை பற்றி கூறிய பிரதமர் முன்னொரு காலத்தில் சிலருக்கு மட்டுமே உரியதாக இருந்த விமானப் பறப்பு என்பது இன்று மாறிவிட்டது. விமான போக்குவரத்து துறையின் புதிய கொள்கைகள் இந்திய மக்களின் லட்சியங்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. இரண்டு மற்றும் மூன்றாம் நிலை நகரங்கள், வளர்ச்சி இயந்திரங்களாக மாறிவருகிறது. மேம்படுத்தப்பட்ட விமான போக்குவரத்து இவர்களுக்கு பயனளிக்கும். இந்த உதான் திட்டம் இமாச்சல பிரதேசத்தின் சுற்றுலா துறைக்கு உதவியாக அமையும் என்று பிரதமர் கூறினார்.

****