Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறையில் இந்தியா மாலத்தீவு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்


பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அமைச்சரவை, இந்தியா மற்றும் மாலத்தீவு இடையே விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் தொடர்பாக அக்டோபர் 2015ல் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்துக்கு ஏற்பளித்தது.

இரு நாடுகளிடையே கையெழுத்தாகியுள்ள இந்த ஒப்பந்தம், விளையாட்டு அறிவியல், விளையாட்டு மருத்துவம், பயிற்சி நுட்பங்கள், இளைஞர் விழாக்களில் பங்கெடுத்தல், போன்றவற்றில் அறிவை வளர்த்துக் கொள்ளவும், திறன் மேம்பாட்டுக்கும் உதவும். இது இந்திய விளையாட்டுத் துறையினர் சர்வதேச அளவில் தங்கள் திறன்களை வளர்த்து, பல்வேறு சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் திறம்பட செயல்பட உதவுவதோடு, இது இந்தியா மாலத்தீவு இடையே கூட்டுறவை மேம்படுத்தவும் உதவும்.

***