பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த துறைகள் தொடர்பாக, அத்துறைகளில் ஒத்துழைப்புக்காக பல்வேறு நாடுகளுடன் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு ஏற்பளித்தது.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விவசாயத் துறை விஞ்ஞானிகள் இந்தியாவுக்கு வருகை தந்து, இத்துறையில் தங்கள் அனுபவங்களையும் அறிவினையும் பகிர்ந்து கொண்டு, விவசாய உற்பத்தியை மேம்படுத்தவும், புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தவும், இந்த ஒப்பந்தம் உதவும். தேவைக்கு ஏற்ப, நிபுணத்துவமும், தொழில்நுட்பமும் நாடு முழுவதும் பயன்படுத்தப்படும்.
இத்துறை ஒதுக்கீடு செய்யும் நிதியின் அடிப்படையில், இதற்கான செலவுகள் மேற்கொள்ளப்படும்.
பின்னணி
1961 அரசு நடைமுறை விதிகளின்படி, இதர நாடுகளுடன் செய்யப்படும் ஒப்பந்தங்கள், போன்ற முக்கிய விஷயங்கள் மத்திய அமைச்சரவையின் கவனத்துக்கு கொண்டு வரப்படும்.
முன்னதாக, விதி 12ன் கீழ், சில நேர்வுகளில் முன்னதாக ஒப்புதல் பெறப்பட்டாலும், சில ஒப்பந்தங்களுக்கு அமைச்சரவையின் பின்னேற்பு பெற முடியவில்லை. இதனால், நெதர்லாந்து, நேபாளம், சைப்ரஸ், இஸ்ரேல், வங்காளதேசம், கம்போடியா, தான்சானியா, சூரினாம், ஜாம்பியா, சிரியா, பூடான், சிலி மற்றும் மொரீஷியஸ் ஆகிய 13 நாடுகளோடு செய்து கொண்ட ஒப்பந்தத்துக்கு பின்னேற்பு வழங்கப்பட்டது.