Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த துறைகளில் தைவான் நாட்டுடனான புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஏற்பு.


பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அமைச்சரவை, தைவான் நாட்டின் இந்திய தைபே சங்கம் மற்றும் இந்தியாவின் தைபே பொருளாதார மற்றும் கலாச்சார சங்கத்திற்கு இடையே விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த துறைகளில் ஒத்துழைப்புக்காக கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கைகு பின்னேற்பு அளித்தது.

விவசாயம், தோட்டக்கலை, கால்நடை, மீன்வளம், நீர்வாழ் உயிரினம் மற்றும் பதனிடுதல், மரபணு ஆராய்ச்சி மற்றும் சுற்றுச் சூழல் நலம் பேணுதல் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேற்கொள்ள இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை வகை செய்யும். இரு நாடுகளும், தத்தமது நாடுகளில் உள்ள தனியார் நிறுவனங்களை, இத்துறைகளில் ஒத்துழைப்பு மேற்கொள்ள ஊக்குவிக்கும். இரு நாடுகளிடையே விஜயம், தகவல் பரிமாற்றம், பயிற்சிகள் மற்றும், விவசாய வர்த்தகம் தொடர்பாக உள்ள தடைகளை நீக்குதல் ஆகியவை தொடர்பாக ஒத்துழைப்பு மேற்கொள்ளப்படும்.

இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையின் அடிப்படையில், ஒரு கூட்டு செயற்குழு உருவாக்கப்பட்டு இரு தரப்புக்கும் பலனளிக்கும் துறைகள் கண்டறியப்பட்டு இரு தரப்பும் அடையாளம் காணும் துறைகளில் ஒத்துழைப்பு மேம்படுத்தப்படும். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஐந்தாண்டு காலத்துக்கு அமலில் இருக்கும். அதன் பின்னர் இரு தரப்பும் எதிர்ப்பு தெரிவிக்காத வரையில், தொடர்ந்து நீட்டிக்கப்படும்.