பி.எம்.இந்தியா
பஹ்ரைன், குவைத், நேபாளம், தென்கொரியா, இலங்கை, வியட்நாம் மற்றும் BRICS நாடுகள் ஆகியவற்றுடன் இளைஞர் பரிமாற்றத் திட்டங்களை ஏற்பாடு செய்வது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் பற்றி பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இன்று எடுத்துரைக்கப்பட்டது.
சர்வதேச இளைஞர் பரிமாற்றத் திட்டங்கள் பல்வேறு நாடுகளின் இளைஞர்களிடையே கருத்துக்கள் மற்றும் அறநெறிகள் குறித்த கருத்துப் பரிமாற்றத்தை ஊக்குவிக்கின்றன: இளைஞர்களிடையே சர்வதேச தொலைநோக்கை உருவாக்கவும் உதவுகின்றன. மேலும் மக்களுக்கிடையிலான தொடர்புகள் மூலம் இந்தப் பரிமாற்றத் திட்டங்கள் அமைதி, புரிந்துணர்வு ஆகியவற்றை வளர்த்து நாடுகளிடையே நட்புடன் கூடிய உறவுகளை வலுப்படுத்துகின்றன.