Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

வேளாண் மற்றும் உணவுத் தொழில் துறையில் இந்தியா மற்றும் உக்ரேன் இடையே ஒப்பந்தம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்


வேளாண் மற்றும் உணவுத் தொழில் துறையில் இந்தியா மற்றும் உக்ரேன் இடையேயான ஒத்துழைப்புக்கான ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் வேளாண் மற்றும் உணவுத் தொழில் துறையின் பல்வேறு பிரிவுகளில் ஒத்துழைப்பு வழங்கப்படும். இருநாடுகளின் பிரதிநிதிகளைக் கொண்ட கூட்டு செயல் குழு, ஒத்துழைப்பு தொடர்பான துறைகளை கண்டறிந்து அதற்கான திட்டங்களை வகுத்து, அமலாக்கப் பணிகளின் கண்காணிப்பு போன்ற பணிகளை மேற்கொள்ளும்.

இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட தேதியிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். மேலும், இந்த ஒப்பந்தம் தானாகவே அடுத்த ஐந்தாண்டுகளுக்கும் நீட்டிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.