பி.எம்.இந்தியா
ஷியாம்ஜி கிருஷ்ண வர்மாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தினார்.
“ஷியாம்ஜி கிருஷ்ண வர்மாவின் பிறந்த தினத்தில் அவருக்கு நான் தலை வணங்குகிறேன். அவர் தேச பக்தர் ஆவார். அதேபோல் பல தேசியவாதிகளுக்கு இவர் முன்னோடியாக திகழ்கின்றார்” என்று பிரதமர் கூறியுள்ளார்.
ஷியாம்ஜி கிருஷ்ண வர்மாவின் பிறந்த நாளை முன்னிட்டுஅவரை நான் வணங்குகிறேன்.
சிறந்த தேச பக்தரான ஷியாம்ஜி கிருஷ்ண வர்மா பாரத தாய்க்கு ஆற்றிய சிறந்த பணிகள் எல்லையற்றவை. வீர்சவார்கர், மதன்லால் திங்ரா மற்றும் லாலா ஹர்தயால் உட்பட பல தேச பக்தர்களுக்கு நாட்டுப்பற்றை இவர் ஊட்டினார்.
2003ஆம் ஆண்டு சுவிச்சர்லாந்தில் இருந்து இவருடைய அஸ்தியை இந்தியாவிற்கு கொண்டு வந்த பெருமை எனக்கு கிடைத்தது.
இந்தியா சுதந்திரம் அடைய தனது வாழ்நாள் முழுவதும் பணியாற்றிய இந்த மாபெரும் தேச பக்தருக்கு மீண்டும் என்னுடைய வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
நரேந்திர மோடி
On his birth anniversary I salute Shyamji Krishna Varma, the great patriot & inspiration for many nationalists. pic.twitter.com/82jOFqBOWc
— Narendra Modi (@narendramodi) October 4, 2015