பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, தேசிய உறுப்பு மாற்று நிறுவனம், சுகாதாரத் துறை அமைச்சகம், சமூக சேவை மற்றும் சமத்துவம், ஸ்பெயின் மற்றும் இந்தியாவின், குடும்பநலம் மற்றும் சுகாதாரத் துறையின், சுகாதாரத் துறை இயக்குநர் இடையே உறுப்பு மாற்று சிகிச்சை தொடர்பான ஒத்துழைப்புக்காக கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளித்தது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் உறுப்பு மாற்று மற்றும் திசு மாற்று சிகிச்சை துறையில் பரஸ்பர ஒத்துழைப்புக்கு வழிவகுக்கும். அவசியமாக உறுப்பு மாற்று சிகிச்சை தேவைப்படும் பல நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளை இந்த ஒப்பந்தம் மேம்படுத்தும்.
ஸ்பெயின் நாட்டோடு நடக்கவிருக்கும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளின்போது, இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்படும்.