பி.எம்.இந்தியா
நுகர்வோர் அளிக்கும் புகார்களை முழுமையாக டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம், இ–ஜாக்ரிதி எவ்வாறு பல சவால்களுக்கு தீர்வு காண்கிறது என்பது குறித்து மத்திய அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி எழுதிய கட்டுரையை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். பல்வேறு தரப்பினரின் விரிவான கலந்தாலோசனைகளுக்குப் பிறகு, இ–ஜாக்ரிதி செம்மைப்படுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் குறிப்பிடுவதாக திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“இந்தக் கட்டுரையில், ஒரு நுகர்வோர்கள் அளிக்கும் புகார்களின் முழு சுழற்சியையும் டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம், இ–ஜாக்ரிதி எவ்வாறு பல சவால்களுக்கு தீர்வு காண்கிறது என்பதை மத்திய அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி விரிவாக விளக்குகிறார்.
சம்பந்தப்பட்ட தரப்பினருடன் விரிவான கலந்தாலோசனைகளைத் தொடர்ந்து, கட்டமைப்பு ரீதியான டிஜிட்டல் சீர்திருத்தத்திற்கு உட்படும் துறைகளில் நுகர்வோர் நீதியையும் சேர்த்து, இ–ஜாக்ரிதி செம்மைப்படுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
***
(Release ID: 2281010)
TV/PLM/RJ
In this article, Union Minister Shri @JoshiPralhad elaborates on how e-Jagriti addresses multiple challenges by digitising the entire lifecycle of a consumer complaint.
— PMO India (@PMOIndia) July 4, 2026
He notes that, following extensive consultations with stakeholders, e-Jagriti has been refined, placing… pic.twitter.com/KJM6w1g1eT