பி.எம்.இந்தியா
பெரு நாட்டு அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற திருமதி கெய்கோ ஃபுஜிமோரிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கும் பெருவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை சுட்டிக்காட்டியுள்ள பிரதமர், பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் எடுத்துரைத்துள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“பெரு அதிபர் தேர்தலில் பெற்ற வெற்றிக்காக, கெய்கோ ஃபுஜிமோரிக்கு, மனமார்ந்த வாழ்த்துக்கள்.
பெருவுடனான தனது நெருங்கிய நட்புறவை இந்தியா ஆழமாக மதிக்கிறது. பல்வேறு துறைகளில் நமது இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த இந்தியா உறுதிபூண்டுள்ளது. உங்கள் பதவிக்காலம் வெற்றிகரமாக அமைய வாழ்த்துகிறேன். நமது நாட்டு மக்களின் நலனுக்காக நமது உறவுகளை மேலும் ஆழப்படுத்த, உங்களுடன் நெருக்கமாகப் பணியாற்ற ஆவலுடன் உள்ளேன்.”
***
(Release ID: 2281006)
TV/PLM/RJ
Heartiest congratulations, Keiko Fujimori, on your victory in the Peruvian Presidential elections.
— Narendra Modi (@narendramodi) July 4, 2026
India deeply values its close friendship with Peru and remains committed to further strengthening our bilateral partnership across diverse sectors. I wish you a successful tenure…