பி.எம்.இந்தியா
ஹூக்ளி துறைமுகப் பொறியாளர்கள் நிறுவனத்தை சீரமைக்கவும், கூட்டு முயற்சி மூலம் சீரமைக்கவும் அந்நிறுவனத்தின் தொழிலாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட விருப்ப ஓய்வை அளிப்பதற்கான திட்டத்திற்கு (வி.ஆர்.எஸ்) பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டம் தொழிற்துறை தாவா சட்டம் – 2007ன் அடிப்படையில் செயல்படுத்தப்படும். இத்திட்டம் 3 மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும். மேலும் ஒரு மாதம் இதை நீட்டிக்க வகை செய்யப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட விருப்ப ஓய்வு திட்டத்தை செயல்படுத்திய பின்னர் இந்த நிறுவனம் தனியார் துறையுடன் இணைந்து செயல்படும். அவ்வாறு செயல்பட முடியவில்லை என்றால் அந்த நிறுவனத்தின் முதலீடு திரும்பப் பெறப்படும்.
இந்த விருப்பு ஓய்வுத் திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் ஹூக்ளி துறைமுகப் பொறியாளர்கள் நிறுவனத்தில் ஆட்குறைப்பு செய்யப்படும். பின்னர் இந்த நிறுவனம் சீரமைக்கப்படும்.
திருத்தப்படுவதற்கு முன்னர் உள்ள ஊதியத்தில் தற்போதுள்ள விருப்ப ஓய்வுத் திட்டம் நடைமுறையில் இருந்தது. தற்போது இது மேம்படுத்தப்பட்டதன் மூலம் அந்த நிறுவனத்தில் உள்ள தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய பயன்கள் அதிகம் கிடைக்கும். இந்த முடிவின் வாயிலாக தொழிலாளர்களின் நலன் காக்கப்படுவதோடு, அரசின் தொடர்ந்து ஏற்பட்டு வரும் இழப்பும் தடுக்கப்படும்.
பின்னணி:
ஹூக்ளி துறைமுகப் பொறியாளர்கள் நிறுவனம் 1819ஆம் ஆண்டு நிறுவனப்பட்டது. பின்னர் 1973ஆம் ஆண்டு ஆண்ட்ரூ யூல் நிறுவனத்தின் துறைமுக பொறியாளர் பணி அமைப்புடன் இணைக்கப்பட்டது. 1984 ஆண்டு இதற்காக இயற்றப்பட்ட சட்டத்தின்படி இந்த நிறுவனம் தேசியமயமாக்கப்பட்டது. பின்னர் இந்த நிறுவனம் ஹூக்ளி துறைமுகப் பொறியாளர்கள் நிறுவனம் என்று பெயர் மாற்றப்பட்டது. இந்த நிறுவனத்திற்கு சால்கியா மற்றும் நசீர்குண்கா ஆகிய இரண்டு இடங்களில் பிரிவுகள் உள்ளன. இவை ஹூக்ளி ஆற்றின் கரையில் அமைந்துள்ளன. இந்த இரண்டு பிரிவுகளும் மிகுந்த நிதி இழப்பில் செயல்பட்டு வருகின்றன.