பி.எம்.இந்தியா
கஷ்மீர் பண்டிட் சமூகத்தின் வளமான மரபுகளைப் பிரதிபலிக்கும் புனிதப் பண்டிகையான ஹெராத் போஷ்டேவையொட்டிப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார் . “இந்தப் புனிதமான நாளில், அனைவரின் வாழ்க்கையிலும் நல்வாழ்வுக்காகவும் வளத்திற்காகவும் நான் பிரார்த்திக்கிறேன். இது வெற்றிக்கான புதிய பாதைகளைத் திறந்து, ஒவ்வொரு வீட்டையும் மகிழ்ச்சியாலும் மனநிறைவாலும் நிரப்பட்டும்” என்று திரு. மோடி கூறியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
“ ஹெராத் போஷ்டே!
இந்தப் புனிதப் பண்டிகை காஷ்மீர் பண்டிட் சமூகத்தின் வளமான மரபுகளைப் பிரதிபலிக்கிறது.
இந்தப் புனிதமான நாளில், அனைவரின் வாழ்க்கையிலும் நல்வாழ்வுக்காகவும் வளத்திற்காகவும் நான் பிரார்த்திக்கிறேன். இது வெற்றிக்கான புதிய பாதைகளைத் திறந்து, ஒவ்வொரு வீட்டையும் மகிழ்ச்சியாலும் மனநிறைவாலும் நிரப்பட்டும்.
***
(Release ID: 2228305)
TV/SMB/RJ
Herath Poshte!
— Narendra Modi (@narendramodi) February 14, 2026
This sacred festival reflects the rich traditions of our Kashmiri Pandit community.
On this pious occasion, I pray for wellness and abundance in everyone’s lives. May it open new pathways of success and fill every home with joy and contentment.