பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கூடுதல் அகவிலைப்படி வழங்க ஒப்புதல் அளித்தது. தற்போது வழங்கப்பட்டு வரும் 119 சதவிகித அடிப்படை ஊதியத்திலிருந்து 6 சதவிகிதம் அதிகரிக்கிறது.
இது 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கும், 58 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கும் பயனளிக்கும்.
இந்த அதிகரிப்பு, 6வது மத்திய ஊதியக் குழு பரிந்துரையின்படி செய்யப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்கள் அகவிலைப்படி அதிகரிப்பால் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூபாய் 6796.50 கோடி ரூபாயும், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி அதிகரிப்பால் ஆண்டுக்கு 7929.24 கோடி ரூபாயும் 2016-17 (ஜனவரி 2016 முதல் பிப்ரவரி 2017 வரை 14 மாதங்கள்) செலவாகும்.