பி.எம்.இந்தியா

ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று அவரது இல்லத்தில் 103 வயதான விதவைப் பெண்மணி திருமதி ஷர்பதி தேவி சந்தித்தார். அவர் பிரதமருக்கு ராக்கி அணிவித்தார்.
சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு தன் சகோதரரை இழந்த திருமதி ஷர்பதி தேவி, இன்றும் அவர் நினைவால் வாடுகிறார். குறிப்பாக, ரக்ஷா பந்தன் அன்று சகோதரரின் நினைவு அவரை வாட்டுகிறது என்று அவரது மகன் பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார். அதன் விளைவாக, திருமதி ஷர்பதி தேவியையும், அவர் குடும்பத்தையும் தமது இல்லத்திற்கு இன்று வருமாறு பிரதமர் அழைத்தார். பிரதமரை சந்தித்து ராக்கி அணிவித்ததில் திருமதி ஷர்பதி தேவி பெருமகிழ்ச்சியடைந்துள்ளார். இன்று அவர்கள் கலந்துரையாடல் அருமையான அனுபவமாக இருந்தது.
******
Smt. Sharbati Devi, a 103 year old widow, today visited the PM's residence, and tied a Rakhi on PM @narendramodi's wrist. pic.twitter.com/IwRq1QiBhj
— PMO India (@PMOIndia) August 7, 2017
Smt. Sharbati Devi lost her brother about 50 years ago, and would always miss him, especially on Rakhi.
— PMO India (@PMOIndia) August 7, 2017
Her son wrote to the Prime Minister and subsequently, the Prime Minister invited Smt. Sharbati Devi and her family to his residence today. pic.twitter.com/9nmvYaOgbt
— PMO India (@PMOIndia) August 7, 2017
Smt. Sharbati Devi was extremely delighted to meet the PM & tie a Rakhi. They had a wonderful interaction today. pic.twitter.com/eBscaolvOG
— PMO India (@PMOIndia) August 7, 2017