Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

106 உள்ளூர் நீர்வழிப் பாதைகளை, தேசிய நீர்வழிப் பாதைகளாக அறிவிக்கும் மத்திய சட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்.


பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, “தேசிய நீர்வழிப் பாதைகள் சட்டம் 2015″ல் திருத்தங்களை மேற்கொள்ள ஒப்புதல் அளித்தது. போக்குவரத்து, சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழு அளித்த அறிக்கை மற்றும் மாநில அரசுகளின் கருத்துக்களின் அடிப்படையில், இத்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இச்சட்டம் ஏற்கனவே உள்ள 5 தேசிய நீர்வழிப் பாதைகளோடு சேர்த்து 106 உள்ளூர் நீர்வழிப் பாதைகளை தேசிய நீர்வழிப் பாதைகளாக அறிவிக்க வகை செய்கிறது. இதன் மூலம், மொத்தம் 111 தேசிய நீர்வழிப் பாதைகள் உள்ளன.

தற்போது தேசிய நீர்வழிப் பாதைகளாக அறிவிக்க வேண்டிய பாதைகளின் எண்ணிக்கை 106. ஏற்கனவே உள்ள தேசிய நீர்வழிப் பாதைகளையும் சேர்த்தால், இச்சட்டத்தில் உள்ள மொத்த தேசிய நீர்வழிப் பாதைகளின் எண்ணிக்கை 111 ஆகும். கீழ்க் கண்ட திருத்தங்கள், 05.05.2015 அன்று வெளியிடப்பட்ட தேசிய நீர்வழிப் பாதைகள் சட்டத்தில் உள்ள 101 நீர்வழிப் பாதைகள் பட்டியலில் மேற்கொள்ளப்படுகிறது. : கேரளாவில் உள்ள 10 நீர்வழிப் பாதைகள் நீக்கப்பட்டன. 17 நீர்வழிப் பாதைகள் தற்போது உள்ள நீர்வழிப் பாதைகளோடு இணைக்கப்பட்டன. 18 நீர்வழிப் பாதைகள் (5 கர்நாடகா, 5 மேகாலயா, 3 மகாராஷ்டிரா, 3 கேரளா, தமிழ்நாடு மற்றும் ராஜஸ்தானில் தலா 1 சேர்க்கப்பட்டுள்ளன. தற்போது உள்ள 5 தேசிய நீர்வழிப் பாதைகளோடு சேர்த்து புதிதாக 106 நீர்வழிப் பாதைகள் சேர்க்கப்பட்டுள்ளன. தேசிய நீர்வழிப் பாதைகள் சட்டம், 2015ல் திருத்தங்கள் மேற்கொள்ள உரிய மசோதா, நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் அறிமுகம் செய்யப்படும்.

மேற்கூறிய 106 நீர்வழிப் பாதைகளை, தேசிய நீர்வழிப் பாதைகளாக அறிவிப்பதால் எவ்விதமான நிதிச் செலவும் ஏற்படாது. உரிய துறையின் நிதி ஒப்புதல், இதன் சாத்தியக் கூறுகளை ஆராய அமைக்கப்பட்டுள்ள இந்திய தேசிய நீர்வழிப் பாதைகள் ஆணையம் அறிக்கை அளித்தவுடன் முடிவு செய்யப்படும். இந்திய தேசிய நீர்வழிப் பாதைகள் ஆணையம், தேசிய நீர்வழிப் பாதைகளை கப்பல் போக்குவரத்துக்கு சாத்தியமானதா என்று ஆராய்ந்து, நிதி ஆதாரங்களையும் ஆராயும்.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தேசிய நீர்வழிப் பாதைகள், இந்திய தேசிய நீர்வழிப் பாதைகள் ஆணையம், கப்பல் போக்குவரத்து மற்றும் இதர சாத்தியக் கூறுகளை ஆராய வழிவகுக்கும். நீரின் பயன்பாடு, கரையின் பயன்பாடு, நிலத்தின் பயன்பாடு ஆகியவற்றின் உரிமைகள் மாநில அரசு வசமே இருக்கும். இதைத் தவிர்த்து மாநில அரசுகள் அடையும் இதர பயன்பாடுகள், : குறைந்த விபத்துகள், சாலைகளில் குறைந்த நெரிசல், பயணிகளை குறைந்த செலவில் நீர்வழிகளில் அழைத்துச் செல்லுதல், சரக்கு போக்குவரத்தில் செலவு குறைவு, மற்றும் அருகாமையில் உள்ள பிரதேசங்களின் வளர்ச்சி ஆகியன.

தேசிய நீர்வழிப் பாதைகளின் விரைவான அறிவிப்பு தொழில் வளர்ச்சியை அதிகரிப்பதோடு, சுற்றுலா துறையையும் வளரச் செய்யும். கூடுதலாக, மலிவான, சுற்றுச் சூழலுக்கு ஏற்றதொரு போக்குவரத்து முறையையும் நாடெங்கும் இது உருவாக்கும்.

பின்னணி :

எரிபொருள் சிக்கன அடிப்படையில், உள்ளூர் நீர் போக்குவரத்து, மிகவும் சிக்கனமான போக்குவரத்து முறையாக கருதப்படுகிறது. ஒரே ஒரு குதிரைச் சக்தி கொண்ட படகு மூலம் 4000 கிலோ பொருட்களை நீர்வழி எடுத்துச் செல்ல முடியும். ஆனால் ஒரு குதிரைச் சக்தியால் சாலை வழியாக 150 கிலோ மற்றும் ரயில் வழியாக 500 கிலோ மட்டுமே எடுத்துச் செல்ல முடியும். உலக வங்கியின் ஆய்வின் படி, ஒரு லிட்டர் எரிபொருள் உள்ளூர் நீர்வழி போக்குவரத்து வழியாக 105 டன் மற்றும் ரயில் வழியாக 85 டன் மற்றும் சாலை வழியாக 24 டன் மட்டுமே எடுத்துச் செல்ல முடியும். எரிபொருள் கழிவு உமிழ்வும், உள்ளூர் நீர் போக்குவரத்தில் 32-36 கிராம் கரியமில வாயு ஒரு டன்னுக்கும், சாலைகளில் கனரக வாகனங்கள் மூலம் எடுத்துச் சென்றால் ஒரு டன்னுக்கு 51-91 கிராம் கரியமில வாயுவும் வெளிப்படும்.

***