Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

17 வயதிற்குக் கீழான உலகக் கால்பந்து கோப்பை இந்தியாவில் 2017 இல் நடைபெறும்


பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை இந்தியாவில் 2017ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 17 வயதிற்கு கீழானவர்கள் பங்கேற்கும் சர்வதேச கால்பந்து அமைப்புகளின் கூட்டமைப்பின் (ஃபிஃபா) சார்பில் நடைபெறும் உலகக் கோப்பைக்கான போட்டிகள் தொடர்பாக கீழ்கண்ட முடிவுகளை மேற்கொண்டது :-

(அ) கீழ்கண்ட விளையாட்டு அரங்குகளில் போட்டிகள் நடைபெறும்:

1. ஜவகர்லால் நேரு விளையாட்டரங்கம், புதுதில்லி.

2. டி.ஒய். பாட்டீல் விளையாட்டரங்கம், நவி மும்பை

3. ஜவகர்லால் நேரு விளையாட்டரங்கம், கொச்சி.

4. சால்ட் லேக் விளையாட்டரங்கம், கொல்கத்தா.

5. ஜவகர்லால் நேரு விளையாட்டரங்கம், ஃபட்டோர்டா, கோவா.

6. இந்திரா காந்தி விளையாட்டரங்கம், குவஹாத்தி.

விளையாட்டுத்துறை செயலாளர், இந்திய விளையாட்டு ஆணையத்தின் டைரக்டர் ஜெனரல், விளையாட்டுத் துறையின் நிதி ஆலோசகர் ஆகியோர் அடங்கிய குழுவிற்கு, இந்த நிகழ்வுகள் நடைபெறும் இடங்களில் மாற்றம் ஏதாகிலும் செய்ய வேண்டியிருந்தாலோ, இடையூறுகள் எதையும் அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டாலோ, அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு/சர்வதேச கால்பந்து கழகங்களின் கூட்டமைப்பு ஆகியவற்றோடு கலந்து ஆலோசித்து, தேவையான மாற்றங்களை செய்ய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான மேல்விரிப்பு ஏற்பாடுகள், காட்சிப் பலகை உள்ளிட்ட சாதனங்கள் ஆகியவற்றுக்கு செலவு செய்யலாம். எனினும் ஏற்கனவே இந்த நிகழ்வுக்கென ஒப்புதல் அளிக்கப்பட்ட ரூ. 95 கோடியை மீறாத வகையில் மொத்த செலவு இருக்க வேண்டும்.

ஒருவேளை இதற்கென கூடுதல் நிதி தேவைப்படுமெனில், விளையாட்டுத்துறை இது குறித்து மத்திய அரசின் நிதித்துறையின் ஒரு பகுதியான செலவுத் துறையை அணுக வேண்டும்.

இந்த நிகழ்ச்சியை வெகு சிறப்பாக நடத்துவதற்கென ஓர் அமைப்புக் குழுவை உருவாக்கவும் மத்திய விளையாட்டு அமைச்சகத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

********