Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் வாழ்த்து


19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் அபாரமான செயல்பாட்டிற்கு  பிரதமர் திரு நரேந்திர மோடி  வாழ்த்து தெரிவித்துள்ளார். 

தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடி தங்களது தனிச்சிறப்பை வீரர்கள் வெளிப்படுத்தியதாக பிரதமர் பாராட்டினார். இந்த வெற்றி ஏராளமான இளம் விளையாட்டு வீரர்களை தொடர்ந்து ஊக்குவிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டதாவது:

“கிரிக்கெட்டில் இந்தியாவின் திறமைகள் மிளிர்கின்றன!

உலகக்கோப்பையை வென்றிருக்கும் நமது 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியை எண்ணி பெருமிதம் கொள்கிறேன். போற்றத்தக்க திறன்களை வெளிப்படுத்தி, தொடர் முழுவதும் வீரர்கள் மிகச் சிறப்பாக விளையாடினார்கள். இந்த வெற்றி ஏராளமான இளம் விளையாட்டு வீரர்களுக்கும் எழுச்சியூட்டும். வீரர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துகள்.”

***

(Release ID: 2224739)

TV/BR/RK