Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

1963 பெரிய துறைமுக பொறுப்புக் கழகங்கள் சட்டத்திற்குப் பதில் 2016 பெரிய துறைமுக பொறுப்புக்கழக ஆணையங்கள் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் திட்டமான 1963 பெரிய துறைமுக பொறுப்புக் கழகங்கள் சட்டத்திற்குப் பதிலாக 2016 பெரிய துறைமுக பொறுப்புக்கழக ஆணையங்கள் மசோதாவைக் கொண்டுவரும் திட்டத்துக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான  மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதனால் பெரிய துறைமுகங்கள் மேலும் அதிக திறனுடன் செயல்பட அதிகாரமளிக்கப்படுகிறது. இவற்றிற்கு முழு சுயஆட்சி அதிகாரம் கிடைப்பதாலும் இவற்றின் நிறுவன அமைப்புகளை நவீனப்படுத்துவதாலும் இந்த அதிகாரம் அளிக்கப்படுகிறது.

 

துறைமுக அடிப்படை வசதி விரிவாக்க மேம்பாடு மற்றும் வர்த்தகத்துக்கு வசதி ஏற்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாக்க் கொண்ட இந்த மசோதா முடிவு மேற்கொள்ளும் நடைமுறையைப் பரவலாக்குவதையும் துறைமுக ஆளுகையில் நிபுணத்துவத்தை கொண்டுவருவதையும் நோக்கமாக்க் கொண்டது. இந்தப் புதிய பெரிய துறைமுகங்கள் ஆணைய மசோதா 2016 விரைவான வெளிப்படையான முடிவு மேற்கொள்ளும் முறையைக் கொண்டுவந்து அக்கரையுள்ளோரின் நலன்களை பாதுகாத்து மேலும் சிறந்த திட்ட செயலாக்க திறன்களை ஏற்படுத்தும். மத்திய துறைமுகங்களில் உள்ள ஆளுகை நடைமுறையை மாற்றி அமைத்து வெற்றிகரமான உலக நடைமுறையாகிய நில உரிமையாளர் துறைமுக மாதிரிக்கு ஏற்ப அமைப்பது இந்த மசோதாவின் நோக்கம். மேலும் பெரிய துறைமுகங்களின் செயல்பாடுகளில்வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரவும் இது உதவும்.

 

பெரிய துறைமுகங்கள் ஆணைய மசோதாவின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

 

  1. இந்த மசோதா 1963 – ம் ஆண்டு பெரிய துறைமுகங்கள் சட்டத்துடன் ஒப்பிடுகையில் கையடக்கமானது. மசோதாவில் சட்டப் பிரிவுகளின் எண்ணிக்கை 134 –லிருந்து 65 ஆக குறைக்கப்பட்டுள்ளது. பழையதாகிவிட்ட பிரிவுகள் மற்றும் ஒரே தன்மைத்தான பிரிவுகள் அகற்றப்பட்டுள்ளன.

 

  1. புதிய மசோதாவின்படி உத்தேசிக்கப்பட்டுள்ள துறைமுக ஆணையவாரியம் எளிமையாக்கப்பட்டு 11 உறுப்பினர்களை மட்டும் பெற்றிருக்கும். முந்தைய வாரியங்களில் 17 முதல் 19 வரை உறுப்பினர்கள் இருந்தனர். கையடக்கமான சுயேட்சை நிபுணர்களைக் கொண்ட இத்தகைய வாரியம் முடிவு மேற்கொள்ளும் நடைமுறையையும் முக்கியத் திட்டமிடலையம் வலுப்படுத்தும். பெரிய துறைமுகங்கள் அமைந்துள்ள மாநில அரசுகளின் பிரதிநிதிகள், ரயில்வே அமைச்சகம், பாதுகாப்பு மற்றும் சுங்க அமைச்சகம், வருவாய்த்துறை ஆகியவற்றின் பிரதிநிதிகள் வாரியத்தின் உறுப்பினர்களாக இருப்பார்கள். இதுதவிர அரசு நியமன உறுப்பினர் ஒருவரும் பெரிய துறைமுக ஆணைய ஊழியர்களின் பிரதிநிதி உறுப்பினர் ஒருவரும் இருப்பர்.
  2. பெரிய துறைமுகங்களின் கட்டண ஆணையத்தின் பங்குபணி மறுவரையறை செய்யப்பட்டுள்ளது. கட்டணங்கள் நிர்ணயிக்கும் அதிகாரம் தற்போது துறைமுக ஆணையத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டணங்கள் பொதுத்துறை, தனியார்துறை பங்கேற்பு திட்டங்களில் ஏலநடைமுறைக்கு சரிபார்ப்புக் கட்டணமாக அமையும். பொதுத்துறை, தனியார்துறை பங்கேற்பு நடத்துனர்கள் சந்தை நிலவரத்துக்கு ஏற்ப கட்டணங்களை நிர்ணயித்துக் கொள்ளலாம். இதர துறைமுகச் சேவைகள் மற்றும் நிலம் உள்ளிட்ட சொத்துக்களுக்கான கட்டண விகிதங்களை நிர்ணயிக்கும் அதிகாரம் துறைமுக ஆணைய வாரியத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது.
  3. பெரிய துறைமுகங்களின் இதரப் பணிகளை மேற்கொள்ளுவதற்கு முந்தைய கட்டண ஆணையத்துக்குப் பதிலாக சுயேட்சையான மறு ஆயுவு வாரியம் உத்தேசிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வாரியம் துறைமுகங்களுக்கும், சலுகைதார்ர்களுக்“கும் இடையேயான தாவாக்களை தீர்த்து வைப்பது, நலிந்த பொதுத்துறை, தனியார்துறை பங்களிப்புத் திட்டங்களை மறு ஆய்வு செய்வது, அத்தகைய திட்டங்களுக்கு புத்துயிர் ஊட்ட ஆலோசனைகள் கூறுவது துறைமுகங்கள் / தனியார் நடத்துனர்கள் வழங்கும் சேவைகள் குறித்த புகார்களைக் கவனிப்பது ஆகிய பணிகளையும் மேற்கொள்ளும்.
  4. ஒப்பந்தங்களைச் செய்து கொள்ளுவது, திட்டமிடல் மற்றும் மேம்பாடு, தேசிய நலன், பாதுகாப்பு, அவசரகாலம் சாராத கட்டணங்களை நிர்ணயிப்பது, ஆகியவை தொடர்பான முழு அதிகாரமும் துறைமுக ஆணைய வாரியத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய பெரிய துறைமுகங்கள் சட்டம் 1963 – ன் படி 22 வகையான  நடவடிக்கைகளில் மத்திய அரசின் முன் அனுமதி தேவைப்படுகிறது.
  5. துறைமுக எல்லைக்கு உட்பட்ட பகுதி தொடர்பான தனது சொந்த மாஸ்டர் திட்டங்களை உருவாக்க வாரியத்துக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் துறைமுக எல்லைக்குள் குழாய்ப்பாதைகள், தொலைபேசிகள், தொலைத்தொடர்புக் கோபுரங்கள், மின்சார வழங்கல் மற்றும் கொண்டுசெல்லும் சாதனங்கள் நிறுவுதல் ஆகியவற்றுக்கும் வாரியம் அதிகாரம் பெறுகிறது. அத்துறைமுகம் தொடர்பான பயன்பாட்டுக்கு நிலத்தை 40 ஆண்டுகள் வரை குத்தகைக்கு விட வாரியத்துக்கு அதிகாரம் உண்டு. புதிய சட்டத்தின் 22 – ம் பிரிவில் குறிப்பிடப்படாத இதரப் பயன்பாட்டுக்கு நிலத்தை 20 ஆண்டுகள் வரை குத்தகைக்கு விடும் அதிகாரமும் உண்டு. இதற்கு மேற்பட்ட காலத்திற்கு குத்தகைக்கு விட மத்திய அரசின் அனுமதி தேவை.
  6. சமுதாய சேவைப் பொறுப்புகள் மற்றும் துறைமுக ஆணையத்தின் அடிப்படை வசதி மேம்பாட்டு பிரிவுகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.