பி.எம்.இந்தியா
2001-ம் ஆண்டு டிசம்பர் 13 அன்று நடந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலின் போது, நாடாளுமன்றத்தைப் பாதுகாக்கும் போது தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த துணிச்சலான பாதுகாப்புப் படையினருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (13.12.2025) அஞ்சலி செலுத்தியுள்ளார்.
கடமையின் போது உயிர் தியாகம் செய்தவர்களை நாடு ஆழ்ந்த மரியாதையுடன் நினைவுகூர்கிறது என்று பிரதமர் கூறியுள்ளார். கடுமையான ஆபத்தை எதிர்கொண்டபோதும் அவர்களின் துணிச்சல், அர்ப்பணிப்பு, அசைக்க முடியாத கடமை உணர்வு ஆகியவை நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் நீடித்த உத்வேகமாகத் தொடர்கின்றன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“2001-ம் ஆண்டு இதே நாளில், நமது நாடாளுமன்றத்தின் மீது நடந்த கொடூரமான தாக்குதலின் போது, அதை முறியடிக்கும் முயற்சியில் தங்கள் உயிரை தியாகம் செய்தவர்களை நமது நாடு நினைவு கூர்கிறது. கடுமையான ஆபத்தை எதிர்கொண்டபோதும், அவர்களின் துணிச்சல், அர்ப்பணிப்பு, அசைக்க முடியாத கடமை உணர்வு ஆகியவை குறிப்பிடத்தக்கவை. அவர்களின் உயர்ந்த தியாகத்தை இந்தியா என்றென்றும் நன்றியுடன் நினைவுகூரும்.”
***
(Release ID: 2203420)
SS/PLM/RJ
On this day, our nation remembers those who laid down their lives during the heinous attack on our Parliament in 2001. In the face of grave danger, their courage, alertness and unwavering sense of duty were remarkable. India will forever remain grateful for their supreme… pic.twitter.com/q8T26s1ogM
— Narendra Modi (@narendramodi) December 13, 2025