Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

2016-17, 2017-18, 2018-19 ஆகிய ஆண்டு காலத்தில் வாங்கவேண்டிய வாக்குப்பதிவு கட்டுப்பாட்டு கருவிகள், வாக்கு எந்திரங்கள் மற்றும் வாக்காளர்கள் சரிபார்க்கவல்ல சோதனை ரசீது சீட்டு எந்திரங்கள் ஆகியவற்றை வாங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.


பிரதமர் மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை தேர்தல் ஆணையத்தின் வேண்டுகோளை ஏற்று கீழுள்ளவற்றை வாங்க ஒப்புதல் அளித்துள்ளது.

அ) பாரத் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் எலக்ட்ரானிக் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா ஆகிய நிறுவனங்களிடம் இருந்து, ஒரு வாக்கு எந்திரம் ரூ 77007 என்ற கணக்கில் 550000 வாக்கு எந்திரங்களும், ஒரு கட்டுப்பாடு எந்திரம் ரூ 93007 என்ற கணக்கில் 545000 கட்டுப்பாடு எந்திரங்களும் வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

ஆ) மேலும் வருங்காலத்தில் எந்திரங்கள் ஒவ்வொன்றுக்கும் ஆகும் செலவை ஒட்டுமொத்தமாக குறைக்கும் பொருட்டு செய்யப்படும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்காக ரூ 25கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுபோக 2017-18, 2018-19 ஆகிய ஆண்டுகளுக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள்(BUs), கட்டுப்பாட்டு இயந்திரங்கள்(CUs) மற்றும் வாக்காளர் சரிபார்க்கவல்ல சோதனை ரசீது எந்திரங்கள் (VVPATUs) வாங்குவதற்கான திட்டங்கள் இதைப்பொறுத்தே வரையறுக்கப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

2000-2005ல் வாங்கப்பட்ட பழைய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை வெளியேற்றி, புதிய எந்திரங்களை வாங்குவதன் மூலம் 2019ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தேர்தல் ஆணையத்தால் தயாராக இருக்க முடியும்.

பின்னணி:

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை ஆரம்பகாலத்தில் சோதனைக்கு உட்படுத்தியபின் இந்திய அளவில் எல்லா தேர்தல்களிலும் எந்திரங்களே பயன்படுத்தப்படுகிறது. தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையின் பேரில் உருவாக்கப்பட்ட EVM எனப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பெங்களூருவில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் (BHEL) மற்றும் ஐதராபாத்தில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா ஆகிய பொதுத்துறை நிறுவனங்களால் உருவாக்கப்படுகின்றன.

மின்னணு எந்திரங்களில் பொதுவாக வாக்குப்பதிவு எந்திரம் மற்றும் கட்டுப்பாட்டு எந்திரம் என இரு அமைப்புகள் உண்டு. வேட்பாளர் எண்ணிக்கை 16ஐ தாண்டும்போது அதிகபட்சமாக ஒரு கட்டுப்பாட்டு எந்திரத்தில் நான்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் வரை இணைத்துக் கொள்ளலாம்.