Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

2017-18ஆம் ஆண்டு மற்றும் 2018-19ஆம் ஆண்டுகளுக்குத் தேவையான வாக்குப் பதிவு இயந்திரங்களையும் அவற்றைக் கட்டுப்படுத்தும் இயந்திரங்களையும் இந்திய தேர்தல் ஆணையம் வாங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது


பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் குழு 2017-18ம் ஆண்டில் நடைபெறும் தேர்தலில் 4,10,000 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களையும் 3,14,000 கட்டுப்பாட்டு இயந்திரங்களையும் 2018-19ம் ஆண்டு 4,35,306 வாக்குப் பதிவு இயந்திரங்களையும் 71,716 கட்டுப்பாட்டு இயந்திரங்களையும் தேர்தல் ஆணையம் வாங்குவதற்கு ஒப்புதல் அளித்தது. வாக்குப் பதிவு இயந்திரம் தலா ரூ. இதன்படி மொத்த செலவு ரூ. 1,009.6 கோடியாகும். இந்த 7,700, கட்டுப்பாட்டு இயந்திரம் தலா ரூ.9,300 என்ற உத்தேச விலைக்கு வாங்கப்படும். இயந்திரங்கள் பெங்களூரில் உள்ள பாரத் எலெக்ட்ரானிக் லிட் (BEL), ஐதராபாதில் உள்ள இந்திய மின்னணுக் கழகம் லிட் (ECIL) ஆகியவற்றிடமிருந்து வாங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன், பி.இ.எல்., இ.சி.ஐ.எல். ஆகிய நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் இயந்திரங்களின் எண்ணிக்கை அளவை அவற்றின் உற்பத்தித் திறனுக்கு ஏற்பவும், கடந்த முறை வழங்கிய விதத்தின் அடிப்படையிலும் மாற்றிக் கொள்ள தேர்தல் ஆணையத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இது 2000-2005ஆம் ஆண்டில் கொள்முதல் செய்யப்பட்ட பழைய இயந்திரங்களின் பயன்பாட்டைப் படிப்படியாகக் குறைத்துக் கொள்ள உதவும். 2019ம் ஆண்டு நடைபெற இருக்கும் மக்களவை, மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களை நடத்துவதற்காகத் தேர்தல் ஆணையத்தின் தேவையைப் பூர்த்தி செய்ய இது உதவும். தேவையின் அளவை மாற்றிக் கொள்ள தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் அளிப்பதன் மூலம், கொள்முதல் நடைமுறையில் நல்ல மேலாண்மையையும் உரிய நேரத்தில் இயந்திரங்களை வழங்கவும் உறுதி செய்யும்.

***