Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

2018 – ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய படகு போட்டி குழுவிற்கு பிரதமர் வாழ்த்து


இந்தோனேஷியாவில் உள்ள ஜகார்த்தா – பாலெம்பாங்-கில் நடைபெறும் 18-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஆடவருக்கான நான்கு துடுப்புகள் குழுப் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற ஸ்வரண் சிங், தத்து பபன் போக்கனல், ஓம் பிரகாஷ், சுக்மீத் சிங் ஆகியோருக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“படகுப் போட்டியில் நமது குழு மகத்தானதாக விளங்குகிறது. ஆடவருக்கான நான்கு துடுப்புகள் படகுப் போட்டியில் தங்கம் வென்றிருப்பதன் மூலம் இந்தியாவின் பெருமை விரிவடைந்துள்ளது. இந்தக்குழுவில் இடம் பெற்ற ஸ்வரண் சிங், தத்து பபன் போக்கனல், ஓம் பிரகாஷ், சுக்மீத் சிங் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.” என்று பிரதமர் கூறியுள்ளார்.

***