Search

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

2021-22 ஆம் நிதியாண்டில் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்களுக்கு இணையான உற்பத்தியுடன் இணைந்த போனஸ் வழங்கப்பட்டதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது


2021-22 ஆம் நிதியாண்டில் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்களுக்கு இணையான  உற்பத்தியுடன் இணைந்த போனஸ் வழங்கப்பட்டதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம் முன்தேதியிட்டு ஒப்புதல் அளித்துள்ளது. 

ஒவ்வொரு ஆண்டும் தசரா மற்றும் பூஜை விடுமுறை நாட்களுக்கு முன் தகுதியுள்ள ரயில்வே ஊழியர்களுக்கு உற்பத்தியுடன் இணைந்த போனஸ் வழங்கப்படும்.  இந்த ஆண்டும் 11.27 லட்சம் அரசிதழ் பதிவுபெறாத ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்திற்கு இணையாக உற்பத்தியுடன் இணைந்த போனஸ் தொகை வழங்கப்பட்டது.  தண்டவாள பராமரிப்பாளர்கள், ஓட்டுநர்கள், ரயில் வண்டி பாதுகாப்பாளர்கள் (கார்டுகள்), நிலைய அதிகாரிகள், மேற்பார்வையாளர்கள், தொழில்நுட்பாளர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், கட்டுப்பாட்டாளர்கள், சமிக்ஞை இயக்குவோர், அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் சி-பிரிவு ஊழியர்கள் போன்றோருக்கு போனஸ் தொகை வழங்கப்பட்டது.

இதனால், அரசுக்கு ரூ.1,832.09 கோடி செலவானதாக மதிப்பிடப்பட்டுள்ளது.  கொவிட்-19 க்கு பிந்தைய சவால்களால் சிக்கலான நிதிநிலைமை ஏற்பட்டபோதும், இந்த போனஸ் வழங்கும் முடிவு எடுக்கப்பட்டது. 

**************