பி.எம்.இந்தியா
2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான 25 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் தனிநபர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஈஷா சிங்கிற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
சிறப்பான புள்ளிகளைப் பெற்று, ஈஷா, அபாரமான துல்லியத்தையும் நிதானத்தையும் வெளிப்படுத்தியதாகப் பிரதமர் குறிப்பிட்டார். மேலும், அவர் தொடர்ந்து பல வெற்றிகளைப் பெறுவதற்கு தமது மனமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
“2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், பெண்களுக்கான 25 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் தனிநபர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஈஷா சிங்கிற்கு வாழ்த்துகள். சிறப்பான புள்ளிகளைப் பெற்று, ஈஷா அபாரமான துல்லியத்தையும் நிதானத்தையும் வெளிப்படுத்தினார். அவர் மேலும் பல வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துகள்: பிரதமர் @narendramodi”
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2316167®=3&lang=1
****
TV/BR/SH
Congratulations to @singhesha10 on winning the Silver Medal in the Women’s 25m Pistol Individual event at the Asian Games 2026. With a great score, Esha showed immense precision and composure. Best wishes to her for many more successes ahead: PM @narendramodi
— PMO India (@PMOIndia) September 28, 2026