Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

23 நவம்பர் 2015ல் கோலாலம்பூரில் பிரதமரின் நிகழ்ச்சிகள்

23 நவம்பர் 2015ல் கோலாலம்பூரில் பிரதமரின் நிகழ்ச்சிகள்

23 நவம்பர் 2015ல் கோலாலம்பூரில் பிரதமரின் நிகழ்ச்சிகள்

23 நவம்பர் 2015ல் கோலாலம்பூரில் பிரதமரின் நிகழ்ச்சிகள்

23 நவம்பர் 2015ல் கோலாலம்பூரில் பிரதமரின் நிகழ்ச்சிகள்

23 நவம்பர் 2015ல் கோலாலம்பூரில் பிரதமரின் நிகழ்ச்சிகள்

23 நவம்பர் 2015ல் கோலாலம்பூரில் பிரதமரின் நிகழ்ச்சிகள்

23 நவம்பர் 2015ல் கோலாலம்பூரில் பிரதமரின் நிகழ்ச்சிகள்


கோலாலம்பூரில் கிழக்காசிய மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர், சுவாமி விவேகானந்தரின் சிலையை திறந்து வைத்து, இந்திய வம்சாவளியினரிடையே உரையாற்றினார்.

கிழக்காசிய மாநாட்டில் பிரதமர் : தீவிரவாதத்தின் நிழல், நம் சமூகம் மற்றும் உலகத்தின் மீது படிந்துள்ளது.


கிழக்காசிய மாநாடு

பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் இன்று கோலாலம்பூரில் கிழக்காசிய மாநாட்டில் கலந்து கொண்டார். அவரது உரையின் போது அவர் உலகம் எதிர்கொண்டு வரும் தீவிரவாதம் குறித்துப் பேசினார்

“பாரீஸ், அங்காரா, மாலி மற்றும் ரஷ்ய விமானம் மீதான தாக்குதல் போன்ற காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள், தீவிரவாதத்தின் நிழல் நம் சமூகம் மீதும் இந்த உலகம் மீதும் தீவிரவாதத்துக்கான ஆள் சேர்ப்பு நடவடிக்கை மற்றும் தாக்குதலுக்கான இலக்குகளாலும் படிந்துள்ளது. அரசியல் காரணங்களை ஒதுக்கி விட்டு, தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்காக புதிய தந்திரங்களை கையாண்டு, உலகளாவிய அளவில் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். எந்த நாடும் தீவிரவாதத்துக்கு உதவியோ அல்லது அதை பயன்படுத்திக் கொள்ளவோ கூடாது. தீவிரவாதக் குழுக்களுக்குள் வேறுபாடு கிடையாது. அடைக்கலம் கிடையாது. நிதி கிடையாது. ஆயுதங்கள் கிடையாது. அதே நேரத்தில் நாம் நமது சமூகங்களுக்கு உள்ளாகவும், நமது இளைஞர்களும் இணைந்து பணியாற்ற வேண்டும். தீவிரவாதத்திலிருந்து மதத்தை பிரிக்கும் முயற்சிகளை வரவேற்கிறேன். ஒவ்வொரு மதத்திலும் உள்ள மனித விழுமங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும்.” என்றார் பிரதமர்.

“இந்தியா மற்றும் வங்காளதேசம், அந்நாடுகளின் கடல் எல்லைகளில் உள்ள சிக்கல்களை UNCLOS திட்டத்தை பயன்படுத்தி தீர்த்துள்ளது. தெற்கு சீன கடற்பகுதியில் உள்ள சர்ச்சைக்குரிய பகுதி தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள பிரகடனத்தை சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் பின்பற்ற வேண்டும் என்றும், இது தொடர்பாக அனைத்து தரப்பினரும் ஒப்புக் கொள்ளும் வகையில் வழிமுறை ஒன்றை உருவாக்க வேண்டும்” என்றார் பிரதமர்.

விவேகானந்தர் சிலை திறப்பு

ராமகிருஷ்ணா மிஷனில் உள்ள சுவாமி விவேகானந்தர் சிலையை பிரதமர் திறந்து வைத்தார்.

ராமகிருஷ்ணா மிஷனில் உள்ள சுவாமி விவேகானந்தரின் சிலையை திறந்து வைத்தார் பிரதமர். இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், சுவாமி விவேகானந்தர் ஒரு தனி நபர் அல்ல என்றும், பல நூற்றாண்டு பழமையான இந்தியக் கலாச்சாரத்தின் ஆன்மா என்றும் குறிப்பிட்டார். உபனிஷத்துகள் மற்றும் உபக்ரஹாக்கள் மற்றும் விரிவான இந்தியக் கலாச்சாரத்தை நாம் உள்வாங்கினால், விவேகானந்தரின் சிலையை நாம் நமக்குள்ளாகவே நிறுவ முடியும். உலகம் பொருள்முதல்வாதம் மற்றும் ஆன்மிகத்தின் இடையே பிளவுபட்டுக் கிடந்தபோது இந்திய ஆன்மிகத்தின் செய்தியை மேற்குக்கு எடுத்துச் சென்றார் சுவாமி விவேகானந்தர். இரண்டு நாட்களாக பிரதமர் பங்கேற்ற ஆசியான் மாநாட்டில், ஒன்றுபட்ட ஆசியா என்ற முழக்கம் எழுப்பப்பட்டது. இந்த யோசனை முதன் முதலில் சுவாமி விவேகானந்தரால் முன்னெடுக்கப்பட்டது என்றார்.


இந்திய வம்சாவளியினரிடையே உரை

மலேசிய இந்திய வம்சாவளியினரிடையே பிரதமர் உரையாற்றினார். “இந்தியா, இந்திய எல்லைக்குள் மட்டும் இல்லை. இந்தியா உலகெங்கும் உள்ள ஒவ்வொரு இந்தியரின் மனதிலும் இருக்கிறது” என்றார்.

“மலோயா இந்தியர்களுக்கு சுதந்திர இந்தியா கடமைப்பட்டுள்ளது. இந்தியாவின் சுதந்திர போராட்டத்தின் ஒரு பகுதி மலேயா இந்தியர்களின் போராட்டங்களாலும், தியாகங்களாலும் எழுதப்பட்டுள்ளது. உங்களின் ஆயிரக்கணக்கான முன்னோர்கள் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவத்தில் சேருவதற்கு முன் வந்தார்கள். தங்கள் வீடுகளின் வசதிகளை ஒதுக்கி விட்டு, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் தோளோடு தோள் நின்று போராடுவதற்காக பல பெண்கள் முன்வந்தார்கள்” என்றார் பிரதமர்.

சுதந்திர இந்தியா உருவாகுவதற்காக தங்கள் இன்னுயிரை ஈந்த மலேய இந்தியர்களுக்கு பிரதமர் அஞ்சலி செலுத்தினார்.

” 70 ஆண்டுகளுக்கு முன்னால், ஒரு மோசமான உலகப்போர் முடிவுக்கு வந்தது. மலேசிய போர்க்களத்தில் தங்கள் இன்னுயிரை ஈந்த எண்ணிலடங்கா இந்திய வீரர்களுக்கு என் அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் ரத்தம் மலேசிய மண்ணோடு நிரந்தரமாக கலந்துள்ளது. அந்தப் போர் இரு நாடுகளுக்கும் முக்கியமான போர். மலேசிய மண்ணில் கலந்துள்ள அவர்களின் ரத்தம், நம் இரு நாடுகளுக்கிடையே ஒரு நெருக்கமான உறவை ஏற்படுத்தியுள்ளது” என்றார் பிரதமர்.

“இன்று உலகின் மிகப்பெரிய அச்சுறுத்தல் தீவிரவாதம். அதற்கு எல்லை கிடையாது. அது மக்களை கவர்வதற்காக மதத்தின் பெயரை பயன்படுத்துகிறது. ஆனால், அனைத்து மதங்களைச் சேர்ந்தவர்களையும் கொல்கிறது. நாம் தீவிரவாதத்திலிருந்து மதத்தை பிரித்தெடுக்க வேண்டும். மனிதத்தை நம்புபவர்கள், நம்பாதவர்கள் என்ற ஒரே வேறுபாடுதான். நான் ஏற்கனவே இதை கூறியிருக்கிறேன். தற்போது மீண்டும் கூறுகிறேன். நம் காலத்தின் மிகப்பெரிய சவாலான தீவிரவாதத்தை எதிர்க்க உலகம் ஒன்றுபட வேண்டும்” என்றார் பிரதமர்.

“1954ம் ஆண்டில் மலேசியாவில், இந்திய மாணவர்கள் நிதியம் ஒன்று, படிக்க வசதியில்லாத மலேசிய இந்திய குழந்தைகளுக்காக ஏற்படுத்தப்பட்டது. இந்த நிதியம் இன்னும், மலேசிய இந்திய மக்களுக்கு தேவைப்படுகிறது. இந்த நிதியத்துக்கு கூடுதலாக 1 மில்லியன் டாலர்களை அளிக்க உள்ளோம் என்பதை மகிழ்ச்சியோடு அறிவித்துக் கொள்கிறேன். ஆயிரக்கணக்கான மாணவர்கள் மருத்துவர்களாவதற்காக இந்தியா வருகின்றனர். நம் சமுதாயத்திற்கு மருத்துவர்கள் மிகவும் அவசியம் என்றாலும், நீங்கள் இதர கல்விப் பிரிவுகளிலும் கவனம் செலுத்துவீர்கள் என்று நம்புகிறேன். இந்தியா மற்றும் மலேசிய பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டங்களை இரு நாடுகளும் உடனடியாக அங்கீகரிக்க வேண்டும். பிரதமர் நஜீப்பிடம் இதை நான் எடுத்துச்செல்ல உள்ளேன்” என்றார் பிரதமர் திரு நரேந்திர மோடி.

*****