பி.எம்.இந்தியா

74-ஆவது ஐ நா பொதுச்சபைக் கூட்டத்திற்கு இடையே எஸ்டோனியக் குடியரசு அதிபர் திருமிகு கெர்ஸ்டி கல்ஜுலைட் –ஐ பிதமர் சந்தித்தார். 2019 ஆகஸ்ட் மாதம் எஸ்டோனியாவுக்கு, இந்தியக் குடியரசுத் துணைத்தலைவர் மேற்கொண்ட ஆக்கப்பூர்வ பயணத்தையடுத்து நிலவும் வலுவான இருதரப்பு உறவுகள் குறித்து இரு தலைவர்களும் விரிவான விவாதம் மேற்கொண்டனர்.

இரு தலைவர்களும் மின்னணு நிர்வாகம், இணையவெளி பாதுகாப்பு, புதிய கண்டுபிடிப்புகள் குறித்து இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் பற்றி விவாதித்தனர். 2021-2022-ஆம் ஆண்டுக்கான ஐ நா பாதுகாப்புச் சபையில் இந்தியா நிரந்தரமில்லாத உறுப்பு நாடாக அந்தஸ்து பெற ஆதரவு அளிக்க எஸ்டோனியாவுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையே தற்போதுள்ள நட்புறவை மேலும் வலுப்படுத்தவும், இருதரப்பு ஒத்துழைப்பில் வாய்ப்புகளை அதிகரிப்பது குறித்து கருத்துக்களை பெறவும், எஸ்டோனியாவுக்கு விளக்கம் அளிப்பதற்கான வாய்ப்பை இந்தச் சந்திப்பு வழங்கியது.
PM @narendramodi had a fruitful meeting with President @KerstiKaljulaid of Estonia. pic.twitter.com/Id6cPDep1X
— PMO India (@PMOIndia) September 26, 2019