Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசுத்தலைவர் ஆற்றிய உரை, நாட்டின் வலிமையை வெளிப்படுத்துவதுடன், வளர்ச்சியடைந்த இந்தியாவின் இலக்கை நோக்கிப் புதிய உத்வேகத்தையும் அளிக்கிறது: பிரதமர்


80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு ஆற்றிய உரை ஊக்கமளிப்பதாகவும், ஆழமான சிந்தனைகளை உள்ளடக்கியதாகவும் இருந்ததாகப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பாராட்டினார்.

 

அவரது கருத்துக்கள் நமது நாட்டின் வலிமையையும், ஒவ்வொரு இந்தியரின் விருப்பங்களையும் பிரதிபலிப்பதாகப் பிரதமர் குறிப்பிட்டார். வளர்ச்சியடைந்த இந்தியாவின் இலக்கை நோக்கிப் புதிய உறுதியுடன் செயல்பட அவரது உரை நம் அனைவருக்கும் உத்வேகம் அளிப்பதாக அவர் தெரிவித்தார்.

 

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டதாவது:

 

“சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசுத்தலைவர் ஆற்றிய உரை ஊக்கமளிப்பதாகவும், ஆழமான கருத்துக்களைத் தூண்டுவதாகவும் அமைந்தது.

 

அவரது கருத்துக்கள் நமது நாட்டின் வலிமையையும், ஒவ்வொரு இந்தியரின் கனவுகளையும் பிரதிபலிக்கின்றன.

 

வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை நோக்கி புதிய உறுதியுடன் செயல்பட அவரது செய்தி நம் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறது.

 

@rashtrapatibhvn”

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2299631&reg=3&lang=1

****

TV/BR/SH