Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

வாரணாசி நாடாளுமன்ற தொகுதியின் கிராம தலைவர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்:

வாரணாசி நாடாளுமன்ற தொகுதியின் கிராம தலைவர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்:


வாரணாசி நாடாளுமன்ற தொகுதியின் கிராமங்களிலிருந்து புது தில்லியில் தமது இல்லத்துக்கு வந்த தலைவர்களை பிரதமர் திரு.நரேந்திர மோடி அன்புடன் வரவேற்றார்.

அவர்களுடன் உரையாடிய பிரமர் அவர்களின் கிராமங்களில் தடுப்பூசி போடுவது, குழந்தைகள் பள்ளிப்படிப்பை இடையில் நிறுத்தாமல் கவனிப்பது கிராமத்தின் தூய்மையைப் பேணுவது ஆகியவற்றில் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொண்டார்.

குழந்தைகளில் ஆணுக்கும் பெண்ணுக்கும் வேற்றுமை பாராட்டுவதை விட்டுவிட வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். பிரதமரின் இந்த அறிவுரையை நிறைவேற்றுவதாக உறுதியளித்த கிராம தலைவர்கள், ஒவ்வொரு பெண் குழந்தை பிறக்கும் போதும் அதனை கொண்டாடும் வகையில் ஒரு மரக்கன்று நடுவதாக உறுதி அளித்தார்.