Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆல்ஸ்டாம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி திரு மார்ட்டின் சியோன் உடன் பிரதமர் கலந்துரையாடினார்


பிரதமர் திரு நரேந்திர மோடி, ஆல்ஸ்டாம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி திரு மார்ட்டின் சியோன் உடன் ஆக்கப்பூர்வமான கலந்துரையாடலை மேற்கொண்டார்.

 

இந்தியாவில் ஆல்ஸ்டாம் நிறுவனம் ஏற்கனவே வலுவான இருப்பைக் கொண்டிருப்பதை பிரதமர் சுட்டிக்காட்டினார். இந்தியாவின் வளர்ச்சிப் பாதையின் மீது அந்நிறுவனம் கொண்டிருக்கும் நம்பிக்கையையும், இந்தியாவில் உற்பத்தி செய்தல் மற்றும் உலகிற்காக உற்பத்தி செய்தல் ஆகிய முயற்சிகளில் அதன் ஈடுபாட்டையும் திரு மோடி பாராட்டினார்.

 

எதிர்காலத்தில் வாய்ப்புகள் இன்னும் சிறப்பாக அமையும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

 

இந்திய இளைஞர்களுடன் இணைந்து செயல்படுமாறு உலக நாடுகளுக்கு இந்தியா அழைப்பு விடுப்பதை திரு மோடி சுட்டிக் காட்டினார்.

 

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் தெரிவித்ததாவது:

 

“ஆல்ஸ்டாம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி திரு  மார்ட்டின் சியோன் உடன் ஆக்கப்பூர்வமான கலந்துரையாடலை மேற்கொண்டேன். இந்தியாவில் ஆல்ஸ்டாம் நிறுவனம் ஏற்கனவே வலுவான இருப்பைக் கொண்டுள்ளது. இந்தியாவின் வளர்ச்சிப் பாதையின் மீதான நிறுவனத்தின் நம்பிக்கையும், இந்தியாவில் உற்பத்தி செய்தல் மற்றும் உலகிற்காக உற்பத்தி செய்தல் என்பதை வரவேற்கும் வகையில் அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளும் பாராட்டுக்குரியவை. மேலும், வரும் காலங்களில் இதற்கான வாய்ப்புகள் இன்னும் சிறப்பாக அமையவுள்ளன.

 

எங்கள் நாட்டு இளைஞர்களுடன் இணைந்து செயல்படுமாறு உலக நாடுகளுக்கு  இந்தியா அழைப்பு விடுக்கிறது.

 

@Alstom”

(Release ID: 2274782)

****

TV/BR/SH