Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்திய தகவல் பணியின் பணியிட சீராய்விற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


பிரதம மந்திரி திரு நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, இந்திய தகவல் பணி, குருப் ஏ பணியிட மறுசீராவிற்கு ஒப்புதலை வழங்கியது.

இந்த மறுசீரமைப்பு, உயர்மட்ட அளவில் இரண்டு பணியிடங்கள், உயர்நிலை நிர்வாக நிலையில் ஐந்து பணியிடங்கள் மற்றும் முதுநிலை நிர்வாக நிலையில் 19 பணியிடங்கள் கூடுதலாக சேர்க்கப்படுவது மற்றும் அதற்கு நிகராக இதர நிலை பணியிடங்கள் குறைத்தல் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். இந்த மறுசீரமைப்பு தற்போது இந்திய தகவல் பணி பணியிடங்களில் உள்ள தேக்கநிலை பிரச்சினைக்கு தீர்வு அளிப்பதோடு இந்திய தகவல் பணி அலுவலர்களின் பணி உயர்வுகளுக்கு உதவும். இந்த மறுசீரமைப்பு ஆய்வு, அரசின் ஊடகம் மற்றும் தகவல் பிரிவுகள் சிறந்த முறையில் செயல்பட உதவும்.

இந்த பணியிடங்கள் சீராய்வு, மக்களுக்கான அரசின் கொள்கைகளை எடுத்துச் செல்லும் பணியை விரிவுபடுத்தும் முயற்சிகளின் பின்னணியாலும், சமீப காலங்களில் தகவலை பரப்புவது அதிகளவு உயர்ந்துள்ளதன் தேவையின் அடிப்படையிலும் மேற்கொள்ளப்பட்டது.