பி.எம்.இந்தியா
பாரத் மாதா கீ ஜெய்!
பாரத் மாதா கீ ஜெய்!
நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள உத்தரப்பிரதேசத்தின் ஆற்றல்மிக்க மற்றும் கர்மயோகி முதல்வர் திரு. யோகி ஆதித்யநாத் அவர்களே, ப்ரயாக்ராஜின் பிரபலமான தலைவர் மற்றும் துணை முதல்வர் திரு. கேசவ் பிரசாத் மவுரியா அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகாக்கள், நாடாளுமன்றத்தில் உள்ள எனது சகாக்கள், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் இதர மக்கள் பிரதிநிதிகளே, மற்றும் உ.பி.யின் சக்தியின் சின்னமான எனதருமை தாய்மார்கள் மற்றும் சகோதரிகளே! உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்!
அன்னை கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதியின் புனிதக் கரையில் அமைந்துள்ள ப்ரயாக்ராஜ் பூமிக்கு நான் தலை வணங்குகிறேன். தர்மம், அறிவு, நீதி என்ற ‘திரிவேணி’ பாயும் பூமி இது. புனிதத் தலங்களின் புனிதத் தலமான ப்ரயாக்ராஜுக்கு வரும் போதெல்லாம் இணையற்ற தூய்மையும் ஆற்றலும் வெளிப்படுகிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கும்பத்தின் போது இந்தப் புனித பூமிக்கு வந்து சங்கமத்தில் நீராடி தெய்வீக ஆனந்தத்தை அனுபவித்தேன். அத்தகைய புனித பூமியான தீர்த்தராஜ் ப்ரயாகைக்கு நான் கைகூப்பி வணங்குகிறேன்.
தாய்மார்களே சகோதரிகளே,
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நமது அன்னை சக்தியின் அடையாளமான கங்கை-யமுனை-சரஸ்வதி சங்கமிக்கும் பூமியாக ப்ரயாக்ராஜ் உள்ளது. இன்று இந்த புனித நகரம் பெண்கள் மற்றும் சக்தியின் ஒரு அற்புதமான சங்கமத்திற்கு சாட்சியாக மாறியுள்ளது. உங்கள் அன்பையும் ஆசீர்வாதத்தையும் எங்களுக்கு வழங்க நீங்கள் அனைவரும் வந்திருப்பது எங்கள் அதிர்ஷ்டம்.
தாய்மார்களே, சகோதரிகளே,
நான் இங்கு வருவதற்கு முன்பு ‘வங்கி சகிகள்‘, சுய உதவி குழுக்களுடன் தொடர்புடைய சகோதரிகள் மற்றும் கன்யா சுமங்கலா திட்டத்தின் பயனாளிகளுடன் உரையாடினேன். உ.பி.யின் வளர்ச்சிக்காகவும், பெண்களின் அதிகாரமளிப்புக்காகவும் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை முழு நாடும் பார்த்துக் கொண்டிருக்கிறது. முதலமைச்சரின் கன்யா சுமங்கலா திட்டத்தின் மூலம் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மகள்களின் கணக்குகளுக்கு கோடிக்கணக்கான ரூபாய்களை மாற்றும் பாக்கியம் இப்போது எனக்கு கிடைத்தது.
கிராமங்களில் உள்ள ஏழைகள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு ஆதரவளிக்கும் சிறந்த வாய்ப்பாக இத்திட்டம் மாறி வருகிறது. உ.பி.யால் தொடங்கப்பட்ட ‘வங்கி சகி’ இயக்கம் பெண்களுக்கான வேலைவாய்ப்புகளுடன் அவர்களது வாழ்விலும் பெரிய மாற்றங்களைக் கொண்டு வருகிறது. அரசின் பல்வேறு திட்டங்களில் இருந்து தங்கள் கணக்கில் நேரடியாக வந்து சேரும் பணத்தை எடுக்க இனி வங்கிக்குச் செல்ல வேண்டியதில்லை. கிராமங்களில் உள்ள அவர்களது வீடுகளிலேயே ‘வங்கி சகி’ உதவியுடன் பணத்தைப் பெறுகிறார்கள். அதாவது, கிராமங்களுக்கு வங்கியைக் கொண்டு வந்திருக்கிறது ‘வங்கி சகி’. இது ஒரு சிறிய பணி என்று நினைப்பவர்களுக்கு, ‘வங்கி சகிகளின்’ பங்களிப்பு எவ்வளவு முக்கியமானது என்பதையும் நான் சொல்ல விரும்புகிறேன். சுமார் 75,000 கோடி பரிவர்த்தனைகளின் பொறுப்பை இந்த ‘வங்கி சகிகளிடம்’ உ.பி அரசு ஒப்படைத்துள்ளது. கிராமங்களில் வசிக்கும் எனது சகோதரிகள் மற்றும் மகள்கள் 75,000 கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்கிறார்கள். அதிக பரிவர்த்தனைகள், அதிக வருமானம்! இந்த ‘வங்கி சகி’களில் பெரும்பாலானவர்கள் சில வருடங்களுக்கு முன்பு வரை சொந்த வங்கிக் கணக்கு கூட இல்லாத சகோதரிகள். ஆனால் இன்று டிஜிட்டல் வங்கியியலின் அதிகாரம் இந்தப் பெண்களின் கைகளில் உள்ளது
தாய்மார்களே, சகோதரிகளே,
குழந்தைகள், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்களுக்கு ரேஷன் பொருட்கள் எடுத்துச் செல்லும் பொறுப்பையும் பெண்களிடம் உ.பி. அரசு ஒப்படைத்துள்ளது. இந்த சத்தான உணவு இனி சுயஉதவி குழுக்களின் பெண்களால் தயாரிக்கப்படும். இதுவும் ஆண்டுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவழிக்கும் மாபெரும் பணியாகும். இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ள 202 துணை சத்துணவு உற்பத்தி பிரிவுகளின் மூலம் சுயஉதவி குழுக்களின் பெண்கள் வருமானம் ஈட்டுவதோடு கிராமங்களின் விவசாயிகளும் பெரும் பயன் பெறுவார்கள். பெண்கள் தங்கள் தொழிற்சாலைகளில் சத்தான உணவுகளை தயாரிக்க கிராமங்களில் இருந்தே பயிர்கள் மற்றும் தானியங்களை வாங்குவார்கள். இந்த அதிகாரமளிக்கும் முயற்சிகள்தான் உ.பி.யில் பெண்களின் வாழ்க்கையை மாற்றத் தொடங்கியுள்ளன. சுய உதவி குழுக்களுக்கு பல்வேறு துறைகளில் உதவியாக அரசு வழங்கும் 1,000 கோடி ரூபாயை தவணையாக வழங்கும் பாக்கியம் இன்று எனக்கு கிடைத்துள்ளது.
நண்பர்களே,
பெண் குழந்தைகள் கருவிலும் பிறந்தவுடனும் கொல்லப்பட்டு விடக்கூடாது என்பதற்காக, ‘பேடீ பச்சாவ், பேடீ படாவ்’ பிரச்சாரத்தின் மூலம் சமூதாயத்தின் விழிப்புணர்வை எழுப்ப முயற்சித்தோம். இதன் விளைவாக இன்று நாட்டின் பல மாநிலங்களில் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. மகப்பேறு விடுப்பு ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது, இதனால் தாய்மார்கள் தங்கள் குழந்தையின் ஆரம்ப கவனிப்பைப் பற்றி கவலைப்படாமல் தங்கள் வேலையைத் தொடரலாம்.
நண்பர்களே,
பிரதமரின் மாத்ரு வந்தனா திட்டத்தின் கீழ், கர்ப்ப காலத்தில் பெண்களின் வங்கிக் கணக்கில் ரூ. 5,000 டெபாசிட் செய்யப்படுகிறது, இதனால் அவர்கள் சரியான உணவை பெற முடியும். இதுவரை இரண்டு கோடிக்கும் மேற்பட்ட சகோதரிகளுக்கு சுமார் 10,000 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
நண்பர்களே,
மகள்கள் சரியாக படிக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் பள்ளிப் படிப்பை பாதியில் விடக்கூடாது என்பதற்காகவும் நாங்கள் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறோம். பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கென தனி கழிப்பறை கட்டுவது, ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் வகையில் சானிடரி பேட்களை கிடைக்க செய்வது போன்ற எந்த முயற்சியில் இருந்தும் நமது அரசு பின்வாங்கவில்லை. தங்க மகள் திட்டத்தின் கீழ் சுமார் 2.5 கோடி பெண் குழந்தைகளின் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. அவர்கள் வளரும்போது அவர்களின் கனவுகளை நனவாக்க இந்தப் பணத்திற்கான வட்டி விகிதமும் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் கோடிக்கணக்கான கழிவறைகள் கட்டப்பட்டன, உஜ்வாலா திட்டத்தின் கீழ் ஏழை சகோதரிகளுக்கு எரிவாயு இணைப்பு வசதிகள் வழங்கப்பட்டன, வீட்டிற்கு குழாய் நீர் உறுதி செய்யப்பட்டது. இவற்றின் மூலம் சகோதரிகளின் வாழ்க்கை வசதிகள் மற்றும் அவர்களின் கௌரவம் உயர்ந்துதுள்ளது.
நண்பர்களே,
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தால் அதிகம் பயனடைந்தவர்கள் நமது சகோதரிகள் தான். மருத்துவமனைகளில் பிரசவமாகட்டும் அல்லது வேறு சிகிச்சையாகட்டும், பணம் இல்லாததால் சகோதரிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டது. ரூ 5 லட்சம் வரை இலவச சிகிச்சை வசதியுடன், அவர்களின் கவலை நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது. இந்திய சமுதாயத்தில் தாய் மற்றும் சகோதரிகளுக்கு எப்போதும் முதன்மையான அந்தஸ்து வழங்கப்பட்டு வருகிறது, பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வீடுகள் முன்னுரிமை அடிப்படையில் பெண்களின் பெயரில் உள்ளன. உ.பி.யை பற்றி மட்டும் பேசினோமானால், பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் 30 லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றில் சுமார் 25 லட்சம் வீடுகள் பெண்களின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளன. உ.பி.யில் முதன்முறையாக 25 லட்சம் பெண்கள் தங்கள் வீடுகளைப் பெற்றுள்ளனர் என்று நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.
தாய்மார்களே, சகோதரிகளே,
இன்று நான் உங்களுக்கு மற்றொரு திட்டத்தைப் பற்றி தெரிவிக்க விரும்புகிறேன். இது மத்திய அரசின் ஸ்வாமித்வா திட்டம். ஸ்வாமித்வா திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள கிராமங்களில் உள்ள வீடுகள் மற்றும் நிலங்கள் ட்ரோன்கள் மூலம் வரைபடமாக்கப்பட்டு, சொத்து ஆவணங்கள் உரிமையாளர்களுக்கு வழங்கப்படுகின்றன. இதிலும் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
நண்பர்களே,
முத்ரா திட்டமானது கிராமங்களில் உள்ள ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த புதிய பெண் தொழில்முனைவோரை ஊக்குவிக்கிறது. இந்தத் திட்டத்தின் கீழ் ஒப்புதல் அளிக்கப்பட்ட மொத்தக் கடன்களில் 70 சதவீதம் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தீன்தயாள் அந்த்யோதயா திட்டம் மூலம் நாடு முழுவதும் உள்ள சுய உதவி குழுக்கள் மற்றும் கிராமப்புற அமைப்புகளுடன் பெண்கள் இணைக்கப்பட்டு வருகின்றனர். மகளிர் சுய உதவி குழுக்களின் சகோதரிகளை தற்சார்பு இந்தியா பிரச்சாரத்தின் சாம்பியன்களாக நான் கருதுகிறேன். இந்த சுய உதவி குழுக்கள் உண்மையில் தேசிய உதவி குழுக்கள். எனவே, தேசிய வாழ்வாதார இயக்கத்தின் கீழ் வழங்கப்படும் உதவி கடந்த 7 ஆண்டுகளில் 2014-க்கு முந்தைய ஐந்து ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது 13 மடங்கு அதிகரித்துள்ளது. முன்பு ஒவ்வொரு சுய உதவிக்குழுவும் பிணையின்றி ரூ.10 லட்சம் வரை கடன் பெற்ற நிலையில், இப்போது இது இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டு ரூ. 20 லட்சம் வழங்கப்படுகிறது.
தாய்மார்களே, சகோதரிகளே,
எங்கள் அரசு பெண்களுக்காக நாடு முழுவதும் உள்ள சைனிக் பள்ளிகளின் கதவுகளைத் திறந்துள்ளது. பாலியல் வன்கொடுமை போன்ற கொடூரமான குற்றங்களை விரைவாக விசாரிக்க, நாடு முழுவதும் சுமார் 700 விரைவு நீதிமன்றங்களை எங்கள் அரசு நிறுவியுள்ளது. இஸ்லாமிய சகோதரிகளை கொடுமைகளில் இருந்து காப்பாற்ற முத்தலாக் சட்டத்தை இயற்றியது நமது அரசு தான்.
நண்பர்களே,
மகன்களின் சட்டப்பூர்வ திருமண வயது 21 ஆண்டுகள், ஆனால் மகள்களுக்கு அது 18 ஆண்டுகள் மட்டுமே. தங்கள் படிப்பைத் தொடர நேரம் கிடைக்க வேண்டும், சம வாய்ப்புகளைப் பெற வேண்டும் என்று மகள்களும் விரும்பினர். எனவே, மகள்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மகள்களுக்காக நாடு இந்த முடிவை எடுக்கிறது, ஆனால் இதை யார் விமர்சிக்கிறார்கள் என்பதை அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
சகோதர சகோதரிகளே,
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு உ.பி.யின் தெருக்களில் மாஃபியா ராஜ்ஜியம் இருந்தது! உ.பி.யின் அரசில் குண்டர்கள் ஆதிக்கம் செலுத்தினர்! யார் அதிகம் கஷ்டப்பட்டார்கள்? உ.பி.யைச் சேர்ந்த என் சகோதரிகள் மற்றும் மகள்கள்! அவர்கள் தெருக்களில் நடப்பதே சிரமமாக இருந்தது. இன்று உ.பி.யில் பாதுகாப்பும், உரிமையும் உள்ளது. இன்று உ.பி.யில் வியாபாரம் போன்ற வாய்ப்புகள் உள்ளன. எங்கள் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் ஆசிகள் இருக்கும் வரை, இந்த புதிய உ.பி.யை யாராலும் மீண்டும் இருளில் தள்ள முடியாது என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.
சகோதர சகோதரிகளே,
நமது உத்திரப்பிரதேசம் முன்னேறி புதிய உயரங்களைத் தொடும் என்று ப்ரயாக்ராஜின் புனித பூமியிலிருந்து இந்த உறுதிமொழியை எடுத்துக் கொள்வோம். உங்களின் ஆசீர்வாதங்களுக்கும் ஆதரவிற்கும் உ.பி.யின் முன்னேற்றத்தில் பங்கேற்பதற்கும் அனைத்து தாய்மார்களுக்கும் சகோதரிகளுக்கும் மீண்டும் ஒருமுறை மரியாதையுடன் தலைவணங்கி நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடன் உரையாடுங்கள்.
பாரத் மாதா கீ ஜெய்! பாரத் மாதா கீ ஜெய்! பாரத் மாதா கீ ஜெய்!
மிக்க நன்றி!
குறிப்பு: பிரதமர் இந்தியில் வழங்கிய உரையின் தோராயமான மொழிபெயர்ப்பு இதுவாகும்.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1783850
***************
Addressing a programme in Prayagraj. #NariShaktiDeshKiShakti https://t.co/2njX6mz9zB
— Narendra Modi (@narendramodi) December 21, 2021
प्रयागराज हजारों सालों से हमारी मातृशक्ति की प्रतीक माँ गंगा-यमुना-सरस्वती के संगम की धरती रही है।
— PMO India (@PMOIndia) December 21, 2021
आज ये तीर्थ नगरी नारी-शक्ति के इतने अद्भुत संगम की भी साक्षी बन रही है: PM @narendramodi
यूपी में विकास के लिए, महिलाओं के सशक्तीकरण के लिए जो काम हुआ है, वो पूरा देश देख रहा है: PM @narendramodi
— PMO India (@PMOIndia) December 21, 2021
अभी यहाँ मुझे मुख्यमंत्री कन्या सुमंगला योजना की एक लाख से ज्यादा लाभार्थी बेटियों के खातों में करोड़ों रुपए ट्रान्सफर करने का सौभाग्य मिला।
— PMO India (@PMOIndia) December 21, 2021
ये योजना गाँव-गरीब के लिए, बेटियों के लिए भरोसे का बहुत बड़ा माध्यम बन रही है: PM @narendramodi
उत्तर प्रदेश की महिलाओं ने, माताओं-बहनों-बेटियों ने ठान लिया है- अब वो पहले की सरकारों वाला दौर, वापस नहीं आने देंगी।
— PMO India (@PMOIndia) December 21, 2021
डबल इंजन की सरकार ने यूपी की महिलाओं को जो सुरक्षा दी है, जो सम्मान दिया है, उनकी गरिमा बढ़ाई है, वो अभूतपूर्व है: PM @narendramodi
बेटियां कोख में ही ना मारी जाएं, वो जन्म लें, इसके लिए हमने 'बेटी बचाओ, बेटी पढ़ाओ' अभियान के माध्यम से समाज की चेतना को जगाने का प्रयास किया।
— PMO India (@PMOIndia) December 21, 2021
आज परिणाम ये है कि देश के अनेक राज्यों में बेटियों की संख्या में बहुत वृद्धि हुई है: PM @narendramodi
हमने गर्भवती महिलाओं के टीकाकरण, अस्पतालों में डिलिवरी और गर्भावस्था के दौरान पोषण पर विशेष ध्यान दिया।
— PMO India (@PMOIndia) December 21, 2021
प्रधानमंत्री मातृवंदना योजना के तहत गर्भावस्था के दौरान 5 हज़ार रुपए महिलाओं के बैंक खाते में जमा किए जाते हैं, ताकि वो उचित खान-पान का ध्यान रख सकें: PM @narendramodi
स्वच्छ भारत मिशन के तहत करोड़ों शौचालय बनने से,
— PMO India (@PMOIndia) December 21, 2021
उज्जवला योजना के तहत गरीब से गरीब बहनों को गैस कनेक्शन की सुविधा मिलने से,
घर में ही नल से जल आने से,
बहनों के जीवन में सुविधा भी आ रही है और उनकी गरिमा में भी वृद्धि हुई है: PM @narendramodi
दशकों तक ऐसी व्यवस्था रही कि घर और घर की संपत्ति को केवल पुरुषों का ही अधिकार समझा जाने लगा।
— PMO India (@PMOIndia) December 21, 2021
घर है तो किसके नाम? पुरुषों के नाम।
खेत है तो किसके नाम? पुरुषों के नाम।
नौकरी, दुकान पर किसका हक? पुरुषों का: PM @narendramodi
आज हमारी सरकार की योजनाएं, इस असमानता को भी दूर कर रही हैं।
— PMO India (@PMOIndia) December 21, 2021
प्रधानमंत्री आवास योजना इसका सबसे बड़ा उदाहरण है।
प्रधानमंत्री आवास योजना के तहत जो घर दिये जा रहे हैं, वो प्राथमिकता के आधार पर महिलाओं के ही नाम से बन रहे हैं: PM @narendramodi
रोजगार के लिए, परिवार की आमदनी बढ़ाने के लिए जो योजनाएँ देश चला रहा है, उसमें भी महिलाओं को बराबर का भागीदार बनाया जा रहा है।
— PMO India (@PMOIndia) December 21, 2021
मुद्रा योजना आज गांव-गांव में, गरीब परिवारों से भी नई-नई महिला उद्यमियों को प्रोत्साहित कर रही है: PM @narendramodi
दीनदयाल अंत्योदय योजना के जरिए भी देश भर में महिलाओं को सेल्फ हेल्प ग्रुप्स और ग्रामीण संगठनों से जोड़ा जा रहा है।
— PMO India (@PMOIndia) December 21, 2021
महिला स्वयं सहायता समूह की बहनों को तो मैं आत्मनिर्भर भारत अभियान की चैपिंयन मानता हूं।
ये स्वयं सहायता समूह, असल में राष्ट्र सहायता समूह हैं: PM @narendramodi
बिना किसी भेदभाव, बिना किसी पक्षपात, डबल इंजन की सरकार, बेटियों के भविष्य को सशक्त करने के लिए निरंतर काम कर रही है।
— PMO India (@PMOIndia) December 21, 2021
अभी कुछ दिन पहले ही केंद्र सरकार ने एक और फैसला किया है।
पहले बेटों के लिए शादी की उम्र कानूनन 21 साल थी, लेकिन बेटियों के लिए ये उम्र 18 साल ही थी: PM
बेटियाँ भी चाहती थीं कि उन्हें उनकी पढ़ाई लिखाई के लिए, आगे बढ़ने के लिए समय मिले, बराबर अवसर मिलें।
— PMO India (@PMOIndia) December 21, 2021
इसलिए, बेटियों के लिए शादी की उम्र को 21 साल करने का प्रयास किया जा रहा है।
देश ये फैसला बेटियों के लिए कर रहा है, लेकिन किसको इससे तकलीफ हो रही है, ये सब देख रहे हैं: PM
5 साल पहले यूपी की सड़कों पर माफियाराज था!
— PMO India (@PMOIndia) December 21, 2021
यूपी की सत्ता में गुंडों की हनक हुआ करती थी!
इसका सबसे बड़ा भुक्तभोगी कौन था?
मेरे यूपी की बहन बेटियाँ थीं।
उन्हें सड़क पर निकलना मुश्किल हुआ करता था। स्कूल, कॉलेज जाना मुश्किल होता था: PM @narendramodi
आप कुछ कह नहीं सकती थीं, बोल नहीं सकती थीं।
— PMO India (@PMOIndia) December 21, 2021
क्योंकि थाने गईं तो अपराधी, बलात्कारी की सिफ़ारिश में किसी का फोन आ जाता था।
योगी जी ने इन गुंडों को उनकी सही जगह पहुंचाया है: PM @narendramodi
आज यूपी में सुरक्षा भी है, अधिकार भी हैं।
— PMO India (@PMOIndia) December 21, 2021
आज यूपी में संभावनाएं भी हैं, व्यापार भी है।
मुझे पूरा विश्वास है, जब हमारी माताओं बहनों का आशीर्वाद है, इस नई यूपी को कोई वापस अंधेरे में नहीं धकेल सकता: PM @narendramodi
2014 में जब हमने मां भारती के बड़े सपनों को साकार करने का बीड़ा उठाया, तो सबसे पहले देश की बेटी के विश्वास को नई ऊर्जा देने का प्रयास शुरू किया।
— Narendra Modi (@narendramodi) December 21, 2021
‘बेटी बचाओ, बेटी पढ़ाओ’ अभियान से समाज की चेतना को जगाने का आज परिणाम ये है कि अनेक राज्यों में बेटियों की संख्या में वृद्धि हुई है। pic.twitter.com/GZPnFlCHHp
संपत्ति के अधिकार को लेकर जो असमानताएं थीं, उन्हें हमारी सरकार की योजनाएं कैसे दूर कर रही हैं, इसका सबसे बड़ा उदाहरण है- प्रधानमंत्री आवास योजना।
— Narendra Modi (@narendramodi) December 21, 2021
इस योजना के तहत ही पहली बार यूपी में 25 लाख महिलाओं के नाम उनका घर हुआ है। यही तो होता है सशक्तिकरण, यही तो होता है विकास! pic.twitter.com/ArVt5h9p3h
महिला स्वयं सहायता समूह की बहनों को मैं आत्मनिर्भर भारत अभियान की चैंपियन मानता हूं। इनके स्वयं सहायता समूह, असल में राष्ट्र सहायता समूह हैं। pic.twitter.com/VymMa7fEaB
— Narendra Modi (@narendramodi) December 21, 2021
डबल इंजन की सरकार बिना किसी भेदभाव और पक्षपात के बेटियों के भविष्य को सशक्त करने के लिए निरंतर काम कर रही है। इसीलिए बेटियों की शादी की उम्र को 18 साल से बढ़ाकर 21 साल करने का प्रयास किया जा रहा है। pic.twitter.com/SleBtfY8AV
— Narendra Modi (@narendramodi) December 21, 2021
आज यूपी में सुरक्षा भी है, अधिकार भी हैं।
— Narendra Modi (@narendramodi) December 21, 2021
आज यूपी में संभावनाएं भी हैं, व्यापार भी है। pic.twitter.com/E3gEfqSmFF