பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடி காந்தி நகரில் இன்று காலையில் தனது தாயார் ஹிரா பா அவர்களை சந்தித்து அவரிடம் ஆசி பெற்றார். குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர் மற்றும் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் உள்பட ஏராளமான தலைவர்கள் பிரதமருக்கு தொலைபேசி மூலம் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
குஜராத்தில் இருந்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி திரு டி.எஸ். தாக்கூர், ஆளுநர் மாளிகைக்குச் சென்று, பிறந்த நாளை ஒட்டி பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
சமூகத்தின் பல்வேறு தரப்புகளைச் சேர்ந்தவர்களிடம் இருந்து சமூக வலைத்தளங்கள் மற்றும் நரேந்திர மோடி செயலி மூலமாக பிரதமர் வாழ்த்துகளைப் பெற்றுக் கொண்டிருக்கிறார்.
டாஹோட் மாவட்டம் லிம்கெடாவில் மலைவாழ் மக்கள் நலனுக்கான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்த பிறகு, அங்கிருந்த ஏராளமான மக்கள் மத்தியில் பிரதமர் உரையாற்றினார். குஜராத் மாநிலத்தில் குடிநீர் விநியோகம்தான் பெரிய சவாலாக இருந்தது என்றும், அதை வெற்றிகரமாக நிறைவேற்றிவிட்டதாகவும் பிரதமர் கூறினார்.
ஏழைகள் மற்றும் விளிம்புநிலையில் உள்ள மக்களின் நலனுக்காக பாடுபடும் அரசாக தன்னுடைய அரசாங்கம் இருக்கும் என அளித்த வாக்குறுதியை நினைவுபடுத்திய பிரதமர், எல்லோரும் கரம் கோர்ப்போம், எல்லோரும் வளர்ச்சி காண்போம் என்ற மந்திரம்தான் இப்போது எல்லா இடங்களிலும் ஒலிப்பதாகக் கூறினார்.
நவ்சாரியில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகள் மற்றும் உதவிக் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சியிலும் பிரதமர் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியின் மூலமாக இன்று சாதனைகள் படைக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்ட பிரதமர், இந்தச் சாதனைக்காக நவ்சாரிக்கு பாராட்டு தெரிவித்தார். படிப்பதில் ஆர்வத்தை உருவாக்குவதில் முன்பு நவ்சாரி சாதித்ததாகவும், இன்றைக்கு மாற்றுத்திறனாளிகள் விஷயத்தில் அக்கறை காட்டி தனித்துவத்தை காட்டியுள்ளது என்றும் பிரதமர் கூறினார்.
`அது நடக்கட்டும்’ என்பது போன்ற போக்குகள் பழமையாகிவிட்டன என்று கூறிய பிரதமர், இந்தியாவிடம் உலகம் நிறைய எதிர்பார்ப்பதாகவும், இந்த வாய்ப்பை நாம் கைவிட்டுவிட முடியாது என்றும் கூறினார். முந்தைய காலங்களில் நாம் அதிக கவனம் செலுத்தாத பகுதிகளில் அதிக கவனம் செலுத்தும் நோக்கத்துடன் அணுகக் கூடிய வகையில் இந்தியா இயக்கம் செயல்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
***
मां की ममता, मां का आशीर्वाद जीवन जीने की जड़ी-बूटी होता है। pic.twitter.com/JeEnDrVevU
— Narendra Modi (@narendramodi) September 17, 2016
Met CJI Shri Thakur. I thank him for his kind wishes. pic.twitter.com/1ElNIgoP1m
— Narendra Modi (@narendramodi) September 17, 2016