Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

புதுதில்லி எய்ம்ஸ் வளாகங்களான மேற்கு அன்சாரி நகர் மற்றும் ஆயுர் விக்யான் நகர் ஆகியவற்றிலுள்ள குடியிருப்பு பகுதிகளை மறுசீரமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


புதுதில்லி எய்ம்ஸ் வளாகங்களான மேற்கு அன்சாரி நகர் மற்றும் ஆயுர் விக்யான் நகர் ஆகியவற்றிலுள்ள குடியிருப்பு பகுதிகளை மறுசீரமைப்பதற்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது. இந்த பகுதிகளில் மொத்தம் 0.87 லட்சம் சதுர மீட்டர் பரப்பில் கட்டப்பட்டுள்ள டைப்-1 முதல் 4 வரையிலான 1444 குடியிருப்பு பகுதிகளையும் 4.02 லட்சம் சதுர மீட்டர் பரப்பில் கட்டப்பட்டுள்ள டைப் இரண்டு முதல் ஆறு வரையிலான 3928 வீடுகளையும் மறுசீரமைக்கும் பணி தேசிய கட்டிடங்கள் அமைப்பு கழகத்திடம் வழங்கப்படும் இந்த கழகம் தர்மசாலைகள் உள்ளிட்ட சமூக அடிப்படை வசதிகளை சுமார் 0.65 லட்சம் சதுர மீட்டர் பரப்பிலும் வர்த்தக கட்டுமானங்களை 0.94 லட்சம் சதுர மீட்டர் பரப்பிலும் உருவாக்கும்.

இந்த திட்டத்திற்கான மொத்த மதிப்பீட்டு செலவீனம் ரூ.4,441 கோடி ஆகும். இந்த மதிப்பீட்டில் 30 ஆண்டுகளுக்கான பராமரிப்பு மற்றும் நடைமுறை செலவீனமும் அடங்கும். இந்த திட்டம் சுயநிதி அடிப்படையில் அரசுக்கு எவ்வித செலவும் இன்றி அமுல்படுத்தப்படும் இதற்கென வர்த்தக இடங்கள் முற்றிலுமாக விற்பனை செய்யும் அடிப்படையில் அமைத்து வழங்கப்படும். இந்த திட்டம் கட்டம் கட்டமாக ஐந்து ஆண்டுகளில் நிறைவு பெறும்.

பின்னணி:

மேற்கு அன்சாரி நகர், ஆயுர் விக்யான் நகர் வளாகங்களில் உள்ள தற்போதைய குடியிருப்பு கட்டிடங்கள் 50-60 ஆண்டுகளுக்கு மேல் பழைமையானவை, தங்கள் பயன்பாட்டு காலத்தை கடந்தவை. அவற்றில் குடியிருப்பது பாதுகாப்பானது அல்ல. இந்த பழைய வீடுகளின் நிலைமை விரைவாக தரம் தாழ்ந்து வருவதால் இவற்றின் பராமரிப்பிற்கு மிக அதிகமான செலவு பிடிக்கிறது. புதுதில்லி எய்ம்ஸ் நிறுவனத்தின் தற்போதைய வீடுகள் நில பயன்பாட்டின் திறனற்ற நிலைமைக்கு உதாரணமாக திகழ்கின்றன. இதன் காரணமாக சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தற்போதைய பாழடைந்த கட்டிடங்களுக்கு பதிலாக புதிய கட்டிடங்கள் கட்டி நில ஆதாரத்தை மிக அதிக அளவு பயன்படுத்துவதற்கென இந்த திட்டத்தை மேற்கொண்டுள்ளது. இத்திட்டம் 2021 தில்லி பெருந்திட்டத்துக்கு ஏற்ப அமைந்துள்ளது. இத்திட்டத்தில் நவீன கட்டுமான தொழில்நுடபங்கள் மற்றும் பசுமை கட்டிட நெறிகள் ஆகியவை பயன்படுத்தப்படும். இந்த வீடுகளில் திட, திரவக் கழிவு நிர்வாக வசதிகள் அமைக்கப் பெற்றிருக்கும்.