பி.எம்.இந்தியா
பிரதம மந்திரி திரு.நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, நவம்பர் 2015, ஜம்மு & காஷ்மீருக்கான பிரதம மந்திரியின் வளர்ச்சித் தொகுப்பின் கீழ் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்துள்ள ஜம்மு & காஷ்மீர் (பி.ஓ.ஜெ.கே.) மற்றும் சம்ப் பகுதிகளை சேர்ந்த இடம்பெயர்ந்த 36,384 குடும்பங்களுக்கு ஒரு முறை நிவாரணமாக ரூ.2000 கோடி மத்திய உதவியாக அளிப்பதற்கு தனது ஒப்புதலை வழங்கியது.
இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு இடம்பெயர்ந்த குடும்பமும் வருவாய் ஈட்டுவதற்கும், அவர்களது வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாக இருப்பதற்கும் ரூ.5.5 லட்சம் ரொக்கமாக வழங்கப்படும். இத்தொகை ஜம்மு & காஷ்மீர் மாநில அரசிற்கு விடுவிக்கப்பட்டு, தகுதியான குடும்பத்திற்கு நேரடி பயன் மாற்றம் (டீ.பீ.டி.) மூலம் வழங்கப்படும்.
1947-ம் ஆண்டு நாடு பிரிவினையடைந்தபோது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்துள்ள ஜம்மு & காஷ்மீர் பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான குடும்பங்கள் ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தில் குடியேறினர். அதனைத் தொடர்ந்து, 1965 மற்றும் 1971 இந்திய-பாகிஸ்தான் போர்களின்போதும், ஜம்மு & காஷ்மீரை சேர்ந்த சம்ப் நியாபத் பகுதியிலிருந்து பல குடும்பங்கள் இடம் பெயர்ந்தனர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்துள்ள ஜம்மு & காஷ்மீர் மற்றும் சம்ப் பகுதிகளை சேர்ந்த இடம்பெயர்ந்தவர்களின் துயர் துடைப்பதற்கும், அவர்களது மறுவாழ்விற்காகவும், இந்திய அரசு/ஜம்மு & காஷ்மீர் மாநில அரசு தொடர்ந்து பல்வேறு நிவாரண மற்றும் மறுவாழ்வு திட்டங்கள் அளித்து வருகின்றன.