Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமரின் பிறந்தநாளை முன்னிட்டு அதிபர் திரு புதின் வாழ்த்து தெரிவித்துள்ளார்


பிரதமர் திரு நரேந்திர மோடியைரஷ்ய அதிபர் திரு விளாடிமிர் புதின் இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

பிரதமரின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு அதிபர் தமது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். அதிபரின் வாழ்த்துகளுக்கும்வலிமையான நட்புறவுக்கும் பிரதமர் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.

23வது இந்திய- ரஷ்ய வருடாந்திர உச்சிமாநாட்டிற்கு முன்னதாக இருதரப்பு திட்டங்களில் உள்ள பல்வேறு விஷயங்கள் குறித்து தலைவர்கள் கேட்டறிந்தார்கள். இந்த ஆண்டின் பிற்பகுதியில் இந்தியா வரவிருக்கும் அதிபர் திரு புதினை வரவேற்க தாம் ஆவலுடன் இருப்பதாக பிரதமர் கூறினார்.

உக்ரைன் மோதலில் அமைதியான வழியில் தீர்வு ஏற்படுவதற்கு இந்தியா தனது முழு ஆதரவையும் வழங்கும் என்று பிரதமர் மீண்டும் உறுதிப்பட தெரிவித்தார்.

பல்வேறு விஷயங்கள் பற்றி தங்கள் கருத்துக்களைத் தொடர்ந்து பகிர்ந்து கொள்ள தலைவர்கள் இசைவு தெரிவித்தனர்.                              

                                                                                                                                                ***

AD/BR/SH